பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

வந்திருந்த நானும் அவங்களோடே புறப்பட்டேன். எல்லாரும் நடந்தே போனோம். அக்கா எனக்கு ஜரிகை ரிப்பன் இரண்டு ஜோடி வாங்கித் தந்திச்சு; நான் வாங்கிக் கொடுத்த நைலான் ரிப்பன் ஒரு ஜோடியை அக்கா மறுதளிக்காமல் வாங்கிக்கிட்டது எனக்குப் புதையல் எடுத்த மாதிரி சந்தோஷமாய் இருந்திச்சு. ரட்டன் பஜாரிலேதான் இந்த டைம்பீஸ் வாங்கினோம். எந்தப் பொருளே வாங்க வேணும்னு முடிவு செஞ்சாலும், வாங்குகிற அந்தப் பொருளை உயர்ந்த ரகமாகப் பார்த்து வாங்க வேணும் என்கிறது தான் சுசீ அக்காவோட சித்தாந்தம். சின்ன வயசிலிருந்தேஇப்படித்தானோ; அம்மா அடிக்கடி சிலாகிச்சு சொல்லுவாங்க! அந்தக் கடிகாரம் அதோ, இருக்குது; ஆனா...ஆனா...என் அன்பு அக்காவை மாத்திரம்தான் காணவே முடியவில்லை!...அட, பாழும் தெய்வமே!... சுடுநீர் சுடாமல் தப்புமா?

சுசீலா பூவும் பொட்டுமாக--புன்னகையும் புதுநிலவு மாகத் 'தரிசனம்' தருகிறாள்!-படத்திலே!...

அம்மா வந்தாள்.

அம்மாவுக்குத் தெய்வநாயகி என்று பெயர்.

தெய்வநாயகி இப்படித்தானா வெள்ளை உடுத்து இருப்பாள்?

அதனால்தானோ, அந்நாட்களிலே, பெரியவர் சசிவர்ணம் "நாயகி! நாயகி' என்று அடிக்கொரு தடவை பெயரைச் சுருக்கிக் குறுக்கி அலட்டி வந்தாரோ?

அம்மாவுக்குப் பூவும் பொட்டும், மஞ்சளும் குங்குமமும் பற்றுவிட்டுப் போயின; 'பற்று' ஆகியும் போய்விட்டன. அவளுடைய இடுக்கு விழுந்த கண்கள் விங்கிக் கிடந்தன. இமைகள் விலகினல் போதும்; அருவியாகக் கண்ணிர் சிதறி விடும். "சுசீ!...மகளே, சுசீ!"-சுசீலாவின் ஜபம்தான்!---ஜபம் செய்து, தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த