பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

'ஆர்கன்ஸா' சேலையின் கரைக்கட்டில் ஈரம் சேர்ந்து கொண்டிருந்தது. 'அக்கா!...” என்று வாய்விட்டு விம்மினாள்; மனம் விட்டுக் கூவினாள். "நீ இப்படி எங்களையெல்லாம் தவிக்கவிட்டுட்டுப் பேசாமல் கொள்ளாமல் கண்ணை மூடிக்கிடுவாயென்று நான் சொப்பனத்தில் கூட நினைக்கவேயில்லையே, தாயே? ஐயையோ, எங்களையெல்லாம் எத்தனை பயங்கரமாய்ச் சோதிச்சுப்பிட்டே, சுசீ?" தொண்டை வலித்துக்கம்' மென்று மடியில் கிடக்கும் பிஞ்சுக் குழவியின் மேனியைத் தடவிவிட்டவாறு, ஒலம் பரப்பினாள் சுமதி. அவள் பார்வை இரண்டாம் கட்டை ஊடுருவிப் பாய்ந்தது. அத்தான் எங்கே?

அடித்து வைத்த சிலையாக, ஆடாமல் அசையாமல், அப்படியே சாய்ந்து கிடக்கின்றான் சுந்தர்! ஆடிப்புனலாக ஓடிக் கொண்டேயிருந்த கண்ணிர் வெள்ளத்தோடு ஒடிப்பிடித்து ஆடிஓடிக் கொண்டிருக்கிருனோ?...

சின்னக் கடிகாரம் படுகெட்டி, சாவி தீர்ந்ததும். அடம் பிடிக்காமல் அடங்கி விட்டது.

‘இன்னமும் கூட மணி ஏழு பத்திலேயே நிற்குதே?---வியப்பு, வேதனையைச் சட்டை உரித்தது. குழந்தையை இதம்பதமாகக் கையிலே எடுக்கவும், எடுத்த பிள்ளையைத் தூளியில் அலுங்காமல் குலுங்காமல் கிடத்தவும் நன்றாகப்பழகிவிட்டாள் சுமதி.

பாவம், 'டைம்ஸ்டார்!---அதற்கும் சோதனைக் காலம் தான். சாவி தீரும் முன்னரே, மீண்டும் சாவி கொடுக்கப்படவும் ஒர் அதிர்ஷ்டம் வேண்டும் அல்லவா?

அம்மா நேற்று முன்தினம் சாவி கொடுத்தாள்.

நேற்றைக்குச் சுமதியின் பங்கு. இன்று அந்தப்பங்கிலும் மண் விழுந்தது. அவளுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. “என் சுசீ அக்காவும் எங்க சுந்தர் அத்தானும் சைனா பஜாருக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை போனாங்க விருந்தாடி