பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து



'ஆ! சுமதியா!'

குழந்தை வீரிடுகிறது—இன்னமும்!

புதுக்கோட்டையில் பிடித்த அழுகை சென்னை வந்து சேர்ந்தும்கூட ஓயவில்லை!—பாவம்!

பாவத்தையும் புண்ணியத்தையும் கூட்டிக் கழித்து 'ஐந்தொகை' போட்டுப் பார்க்கக் கூடிய நேரம் இதுவா?—வேளை இதுவா, என்ன?

எல்லாம் முடிந்துவிட்டது!

பின், குழந்தை—அந்தப் பச்சைப் பாலகன் ஏன் இன்னமும் அலறுகிறான்?—கதறுகிறான்?

எல்லாம் முடியவில்லை; எல்லாமே இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது என்பதைப் பிரகடனம் செய்து அறிவுறுத்துவது போன்று, பிறைமதி கண் சிமிட்டிக் கண் பொத்தி விளையாடிக் கொண்டேயிருக்கிறது; விளையாட்டுக்காட்டிக் கொண்டேயிருக்கிறது!

வெள்ளைப் புடவையின் முந்தானே தெப்பமாகி விட்டது

சீ—3