பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

துக்குடிப் பனங்கற்கண்டு போட்டிருக்கேனுங்க, உங்களுக்கு புகைச்சல் இருமல் ஒரு சமயம் தொல்லை கொடுத்தபோது, இதே மாதிரியான கைவாகனத்தோடுதானே அக்காளும் பாலைத் தயாரிச்சுத் தந்திச்சுதுங்க? அதே கணக்கிலே இப்பவும் ருசி தப்பாதுங்க!' என்று வியாக்யானம் செய்தாள் சுமதி. லேசாகச் சரிந்திருந்த மாரகச் சேலையைப் பதட்டத்துடன் சரி செய்து, சரி பார்த்துக் கொள்ளவும் தவறிவிடவில்லையே!

மனத்தின் கஷ்டநஷ்டங்களை வாய் விட்டுப் பேசத்தெரியாத பாப்பா வெறும் மெளனப் பார்வையின் வாயிலாகத் தாயை ஏக்கத்தோடு பார்ப்பது உண்டே!--அவ்வாறு தான் இப்போது சுமதியைப் பார்த்தான் சுந்தர். அவனது பார்வையின் ஒரு கோணம், என்னென்னவோ பேசத்துடித்தது; மறுகோணத்தில், என்னவெல்லாமோ கேட்கத் தவிப்பதும் தெரிந்தது; சுசீ"! என்றால் அவன்.

"நான் சுசீயோட தங்கை, அத்தான்!”

" ஊம்!"

"இந்தப் பாலிலே ரெண்டு வாய் குடியுங்க. இருபது நாளைக்கு மேலாக ஒண்ணுமே சாப்பிடாமல் இருந்தால், உடம்பு என்னித்துக்கு ஆகும், அத்தான்?"

"இந்த உடம்பு இனி என்னத்துக்கு ஆகவேனும்?”

அவள் தேம்பலானாள்.

‘'நீ ஏம்மா அழறே? நான் ஒருத்தன் அழறது. போதாதா?"

'நீங்க என்னென்னமோ பேசறிங்களே, அத்தான்?-- அதையெல்லாம் என்னாலே ஜீரணிக்கக்கூட முடியலீங்க, அத்தான்!'

அவனுக்கு உதடுகள் துடித்தன. நீட்டிய பாலைக் கை நீட்டி வாங்கினான். இயந்திர ரீதியான போக்கு; ஒரு வாய்