பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


‘அத்தானை என் கையிலே ஒப்படைச்சிட்டுப் போயிருக்குது அக்கா; அக்கா கட்டளைப்படி அத்தானே நான் கல்யாணம் கட்டிக் கொண்டால், அத்தான் புதுப் பிறவி எடுத்திடுவாங்கதானே?- நாலும் நாலும் எட்டுத் தானே அம்மா?’ என்று வீட்டுக் கணக்கைத் தாயிடம் சரி பார்த்துக் கொள்ளும் சின்னஞ்சிறு சிறுமியின் அப்பாவித் தனமான வெகுளிப் பண்புடன் வினவினுள் சுமதி.

'பின்னே, சந்தேகமென்ன?... மாப்பிள்ளையின் உடம்பு மட்டுமில்லை, மனசும்கூட கடைத்தேறி விடாதாம்மா?”

"தெய்வமே!’ என்று கைகூப்பினுள் சுசீலாவின் சகோதரி.

கூப்பிய பூங்கரங்களிலே சுசீ தெய்வமாகப் புன்னகை சொரிகிருள்:

விதிக்கு இத்தனை நாணயமான பண்புடன் சிரிக்கத் தெரிவில்லையே?

"அக்காளோட ஈடுகட்ட முடியாத நஷ்டத்தின் பிரிவினலே, தினம் தினம் செத்துச் செத்துப் பிழைக்கும் அத்தானைக் காப்பாற்றும் பாக்கியமும் புண்ணியமும் எனக்குக் கிடைச்சிட்டா, அதையே என்னுேட பிறவிப் பயனுக நினைச்சு நினைச்சு ஆனந்தக் கண்ணிர் விடமாட்டேனு? தயங்கியோ, மலேச்சோ, வெட்கப்பட்டோ இனி பிரயோ சனம் கிடையாது! என் அன்பான அத்தான்கிட்டே சமயம் பார்த்துச் சங்கதியை நினைவூட்டி ஒரு நல்ல முடிவுக்கு ஒரு நல்ல ஆரம்பத்தைத் தேடிக்கிடுறேன், அம்மா!' என்று உத்தாரம் கொடுத்தாள் கன்னி இளமான்.

பிள்ளை மூத்திரத்தில் சொட்டச் சொட்ட நனைந்து சல்லாபமாகச் கிடக்கிறது!

இந்நேரம் மாமூல் பிரகாரம் அழுது வைத்திருக்கக் கூடாதோ?