பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


"க்ளாக்ஸோ டப்பா, குளுகோஸ் டின், மாவு அடிக்கும் கிளாஸ், கரண்டி சகிதம் அம்மா தயாராளுள்; வெந்நீர் ஃபிளாஸ்க் வந்துவிட்டால், குழந்தை உணவு தயார்!

செங்கதிர்ச் செல்வன் ஏறுமுகம் காட்டினன்.

ராஜாப்பயல் இன்முகம் காட்டினன்,

அத்தான் கண் திறக்கவில்லை!

சுமதி காத்திருந்தாள்; காத்து இருந்தாள்:

தஞ்சாவூரில் மானம்புச் சாவடிப் பள்ளியில் பணி புரிந்த காலை, திட்டங்கள் வகுத்து அவற்றிற்கு ஏற்றவாறு அவற்றை அனுசரித்தும் நடந்து வந்தவள் சுமதி. சுமதியா? அவள் ரொம்பக் கண்டிப்பு, ஸ்ட்ரிக்ட்! என்று அவளுடைய சக ஆசிரியைத் தோழி நூர் உன்னிலா பேகம் பாராட்டிப் புகழ மாட்டாளா? ஏன், குமார்கூட இந்தப் புகழாரத்தை எத்தனை தரம் அவளுக்குச் சூட்டி, தானும் மகிழ்ந்து அவளேயும் மகிழ்வுறச் செய்திருக்கின்ருன்!-சுசீலாவின் அகால மரணம் அவளே மட்டும்தானு நிலைகுலைய வைத்தது? கனவுகளைப் பற்றிய ஸ்மரணைகூட தடம் காட்டாத வண்ணம், அவள் மாறிவிட்டாள்; மாற்றிக் கொண்டு விட்டாள்; மாற்றப் பட்டும்விட்டாள்; வாழ்க்கை முள் ரோஜாவா?-இல்லை, ரோஜா முள்ளா?

மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

காலத்தின் பயன் கருதாப் பணியை எண்ணிப் பார்க் கையில், சுமதியின் மனிதாபிமானம் நன்றியறிவு மேலிட மேலும் விழிப்பும் சுறுசுறுப்பும் அடையத் தொடங்கி யிருந்தது. எதிர்வசத்தில், வசம் இழக்காத மனநிலைப்புடன் பார்வையைச் செலுத்திய தருணத்திலே, சுந்தர் கட்டிலில் புரண்டு படுத்தது தெரிய வந்தது. அநேகமாக, இனிமேல் விழித்துக் கொள்வார். ஊம், துங்கிளுல்தானே விழித்துக் கொள்ள?- அக்கா இருந்த காலத்தில், எத்தனை சீக்கிரம்