பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


துயில் கலந்து, நீராடி, அச்சகத்துக்குப் புறப்பட்டுவிடுவார்! அக்கா சீதேவி-மகாலட்சுமி-அவள் காலடி நிழல் படர்ந் தால் போதும்; நல்ல உள்ளமும் நயமான பண்புடைமையும் பரிபக்குவம் அடைந்து விடுமே!-சுசி அக்கா! உன் அருமைத் தங்கச்சிப் பொண்ணைப் பார்க்க எப்போ திரும்பப் போறே? அழுத்து போதும் என்றுதான் இருந்தாள்; ஆனால், ஆசைக்கு உள்ளது போன்று, அழுகைக்கும் அளவே கிடையாதோ, என்னவோ?......ஆண்டவன் அழுகையைத்தான் முதன் முதலில் கவனிப்பாராமே!-மகாத்மா சொல்லவில்லையா?...

பாப்பா மெளனப் பிண்டமாகக் கிடந்தது. புதிய மெத்தை; சின்ன மெத்தை; சின்னப் பாப்பாதானே?

போதும், போதும்!

மண்ணடிக் கடைத் தெருவில் வாங்கினுள் சுமதி. இது கூட அத்தான்காரருக்குத் தெரிய நியாயமில்லை; சுசிலா இல்லாத இந்த மண்ணிலே நடந்த எதுதான் அத்தானுக்குத் தெரியும்? இல்வாழ்வுக்கு மங்கலம் தந்த மாண்புமிகு தெய்வம் மறைந்துவிட்டாளே?-சகோதரியின் இனியநினைவு அவளுக்குச் சிலிர்ப்பினை உண்டாக்கியது; தன் முடிவே தானக ஆகி, தானே அம்முடிவில் இரண்டறக் கலந்த நிலையில், அந்தம்மிக்க சூழலில் சுந்தரே உயிரும் உயிர்ப்புமாகி விளங்கி, தானும் இயங்கி, தன்னையும் இயக்கி நின்ற மகோன்னதமான ஒரு மனநிலையில் அவள் எவ்வளவு வினுடிகள் மெய்ம்மறந்திருந்தாளோ?

அத்தானுக்குப் புதுப்பிறவி ஏற்படுத்த வேணும்; புதிய உள்ளம், புதிய வாழ்வு; புதிய உலகம்!-ஆம்; என் கனவு பலித்தால், என் அன்பு அத்தானின் வாழ்வும் மறுமலர்ச்சி அடைந்துவிடும்:

சுசீயின் நிழற்படத்தின் அடியில் தியாகத்தின் சுடர் தெறித்து எரிந்து கொண்டிருந்த அந்த நல்ல விளக்கு’, அவளுக்கு-சுமதிக்குத் தெம்பையும் நம்பிக்கையையும் புதிய உருவிலே சுரக்கச் செய்திருக்கலாம்: சூன்யத்தின் சூத்திர