பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


தாரிக்குச் சுபீட்சமாகவும் சுமுகமுடனும் கும்பிடு கொடுத் தாள் எங்க குடும்பத்திலே நல்ல பொழுதை விடியப் பண்ணு, முருகா!'

பேபி எப்போது சிரிக்கும்?.

இளங்காலை வேலையில் அரைலோட்டா காப்பி குடித்தது; அவ்வளவுதான். சுந்தர் மாதிரி சுமதிக்கும் காப்பி என்ருல் கை-மயக்கம்! அத்தானுக்கு உண்டான ஸ்பெஷல் ஒரு ஃபிளாஸ்கில் காத்துத் தவம் இருக் கிறது. பிள்ளேயாண்டான் சிரித்து வைக்கும் நேரம் பார்த்து "அவர் எழுந்து விட்டால், பருத்தி புடவையாகக் காய்த்த கதைதான்! ஆகட்டும், பார்க்கலாம். நமட்டுச் சிரிப்பு நிலா வதனத்திடை விளைந்து முத்தெடுத்த விந்தையை வட்டக் கண்ணுடி எட்டி நின்று காட்டியது.

§ ஒரு ம

காப்பி’ இ

சமயங்களில், காலம் ஆமை அவதாரமும் எடுக்கும்

போலும்!

அம்மா இப்போது தெளிவுடன் விளங்கினுள்; தவம் இயற்றிப் பெற்ற தலைமகள், தவத்தைப் பொய்யாக்கிவிட்டு, விதிவழி ஏகிவிட்ட ஆருத வடு, ஆற்ருவொண்ணுத அவ்வடு தாய்நெஞ்சில் கட்டை வேகும் பரியந்தம் நிலைத்தே இருக்கும். ஆனல், முதற் சொந்தத்தில் பந்தம் ஏற்படுத்திக் கொண்ட உறையூர் மாப்பிள்ளை, சொந்தம் விட்டுப் போகாமல், பந்தத்துக்குப் புத்துயிர் அளிக்கச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து விடலாமென்ற நம்பிக்கையில் ஏற்பட்ட தெளிவு அது. இந்த உறவு நீடித்தால்தானே, பிறந்த குழந்தையின் எதிர்காலத்திற்கும் ஒரு நல்ல வழி பிறக்க முடியும்?

சுமதிக்குச் சும்மா இருக்கப் பிடிக்காது; சுறுசுறுப்பாக எதையாவது செய்வாள்;படிப்பாள், பிளாஸ்டிக் நூலிழைகளை வர்ணம் பிரித்து, வர்ணம் சேர்த்துக் கூடைபின்னுவாள்; "டீச்சர், டீச்சர்!’ என்று வாய் ஓயாமல் விளித்துச் சுற்றிச்