பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


சுற்றிவரும் சிறுவர்-சிறுமியர்க்கு மத்தியில் வம்பளக்கவும் மறக்கமாட்டாள். இங்கே, சோகத்தின் சுற்றுச் சார்பில், அம்மாவோடு வம்பளக்க வாய்ப்பு ஏது? அதற்கு கந்தி மனநிலைதான் ஏது?-அத்தானுக்குப் பயங்கரமான இந்த இழப்பு உண்டாகாமல் இருந்திருக்கும் பட்சத்தில், 'சுமதி: சுமதி!' என்று கூப்பிட்டு வாயைக் கிண்டிக் கிளறிக் கொண்டுதான் இருப்பார். தெய்வத்துக்கும் மனசாட்சிக்கும் சமுதாயத்துக்கும் பயந்து பயந்து நடப்பதும் பேசுவதுமே அவருக்கு வாழ்வின் நடைமுறையாகவே அமைந்துவிட்டது. அத்தான் முன் போலப் பேச ஆரம்பிப்பாரா?...

சுந்தரேசனின் முதுகுப்புறத்தில் சலனம் எதுவும் தெரியவில்லை.

சோளியில் ஏதோ ஓர் உறுத்தலை உணரவே, நெஞ்சகப் பகுதியில் தளிர் விரல்களால் தடவிப் பார்த்தாள் சுமதி. இன்பக் கிளுகிளுப்பின் உறுத்தல்தான் கண்ட பலன்; அவளு டைய அந்தக் கடிதம் சுசீலாவின் பார்வைக்காகவே காத்திருந்தது; ஆஞல், சுசீலாவோ காத்திருக்காமல், மறைய நேர்ந்தது. ஆபத்துச் சமயத்தில் அதை டம்பப்பைக்குள் திணித்தவள், அன்ருெரு நாள் அதை எடுத்து, பெட்டிக் கடியில் போட்டுவிடவேண்டுமென்ற சிந்தனையுடன்தான் "ப்ளவுளின் உள்ளே போட்டு வைத்தாள். நேரம் தப்பிய நேரத்தில், அது அத்தானின் கவனத்திற்கும் இலக்காகி விட்டது. அக்கா உயிரோடிருக்கும் காலத்தில் அவள் அதைப் படித்திருந்தால், அத்தானுக்கும் அதைப் பார்க்கச் சந்தர்ப்பம் கொட்டு முழக்கோடு கிட்டியிருக்கும்!-இனி அந்தக் கடிதம் இதே பழைய தோல்பெட்டிக்கு அடியில் பொய்யாய் கனவாய் பழங்கதையாகக் கிடக்க வேண்டியது தான்; அதுவே அதன் தலைவிதி!-அன்பு அத்தான் அதைப் பார்க்காமலும் படிக்காமலும் இருப்பதே சிலாக்கியம்!...

வாசல் வெளியில் மண்எண்ணெய் வண்டி கூவிக் கொண் டிருந்தது. கிருஷ்ணபரமாத்மா மன்னிப்பாராக!-பாஷை புரிந்தால்!