பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


'நான் உங்களுக்காக் காத்துத் தவம் கிடக்கும் சுமதி என்று சொல்கிறேன், அத்தான்!”

'சுமதி!...” என்று ஓங்காரக் குரலெடுத்துக் கதறினன் சுந்தர்.

"ஆமாங்க, நான் சுமதிதான்...சுமதியேதான்! வெறும் சுமதி இல்லை!-நான் என் சுசீலா அக்காளின் தங்கை சுமதி:என் ராஜாப்பயலின் தாய் சுமதி!..நான் இப்போது மிலஸ் சுமதி சுந்தர்!’

சுந்தரின் கண்கள் மாலை தொடுத்தன.

ஆஹார்.

குழத்தை எவ்வளவு அழகாகவும் சாந்தியுடனும் சிரிக்கிறது!

விதிக்கு இவ்வளவு அழகாக...அமைதியாகச் சிரிக்கத் தெரியவில்லையே?...தெரிவதில்லையே?...