பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பது

தந்தி - ஒரு புதின்

கணங்கள் பேய்க்கணங்களாக உருண்டு கொண்டிருக் கின்றன!

பொம்மலாட்டத்தில் சூத்திரக் கயிறு அறுந்ததும், பொம்மை திரிசங்கு சொர்க்கத்தில் நிலைதடுமாறிச் சுழல்வது இயல்பு. அந்த விதிக்கு ஆட்பட்டான் சுந்தர். வேர்வை முகத்தில் ஆருகப் பெருகியது; கண்ணிர் கண்களில் வெள்ள மாக வழிந்தது; நெஞ்சத்து அலைகளின் ஆரவாரமும் ஆர்ப் பாட்டமும் கூ டி ன .ே வ தவிர, குறைந்தபாடில்லை. அதிசயத்தைத் தரிசிப்பதுபோல, அதிசயமாகச் சுமதியைப் பார்த்தான்; பார்வையிட்டான். சுமதியைப் பார்த்த பார் வையிலே, சுசீலா ஆடும் தீபம் ஆளுள்; சுடர்ச் சிதறல்களுக்கு நாயகியாக சுமதி நிழலாடினள். சுசீலாவும் சுமதியும் இரண்டறக் கலந்தும், சுசீலாவில் சுமதியும் சுமதியில் சுசீலா வுமாக இரண்டறக் கலந்து சிரிக்கவும் தொடங்கிவிட்டனர். அந்தச் சிரிப்பு ஒருவேளை, விதிக்குச் சொந்தமாகப் பந்தம் கொண்டாடியிருக்கலாமோ?

குழந்தை சிணுங்கத் தொடங்கியது.