பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


சுமதி குழந்தையைச் சுந்தரிடமிருந்து ஏ ந் தி க் கொண்டாள். ஆகாரம் கொடுக்க அன்னையிடம் கொண்டு சென்ருள்.

சுந்தர் இப்போது நல்ல நினைவு எய்தினன். சுமதியைத் தேடினன்; அவளைக் காணுமல் பரபரப்படைந்தான்; பதட்டமும் அடைந்தான். சுமதி எங்கே?-'சுமதி...சுமதி!' என்று பவ்யமான-பான்மைமிக்க கு ர ல் எடுத்துக் கூப்பிட்டான். தவிப்பும் குழப்பமும் மிகுந்தன; தாபமும் தாகமும் மிஞ்சின; கண்களிலே கண்ணிர் மிச்சம் இல்லை. சுமதிதான் அப்படிப் பேசிளைா?-ஆமாங்க, நான் சுமதி தான்...சுமதியேதான்! வெறும் சுமதி இல்லை!-நான் என் சுசீலா அக்காளின் தங்கை சுமதி!-என் ராஜாப்பயலின் தாய் சுமதி!-நான் இப்போது மிஸஸ் சுமதி சுந்தர்!...” சுமதியேதான் பேசியிருப்பாளோ?-ஒ! இருக்கும்! தன் னுடைய உயிர்க்கூட்டிலே பாசக் கயிறு வளைந்து சுருண்ட நேரத்தில் சுசீலா விதியின் தீர்ப்பை நிர்ணயித்த காட்சியைதன்னை சுமதியின் அன்புக் கரங்களிலே ஒப்படைத்த அந்தக் காட்சியின் விதியை அவன் எப்போதுதான் மறந்தான்? அந்த ஒரு மனக்கனவில் அவன் உயிர்க் கழுவில் நின்று ஊசலாடிய வேளைகளுக்குக் கணக்கு ஏது? வழக்கு ஏது?

சுசீலாவின் படத்தினின்றும் ஜாதிமல்லிப்பூ ஒன்று சிதறி விழுகிறது!

‘என்ன வாழ்க்கை இது?...வாழ்க்கை வாழ்வதற்காம்!-- எங்கே வாழ்வது?...எப்படி வாழ்வது? ஏன் வாழ்வதாம்?சுந்தரின் மனம் உயிர்க்கழுவில் துடிக்கிறது!

குழந்தை பின் கட்டில் முகாரி பாடுகிறது. கிரைப் மிக்சர் அருந்த இத்தனை லூட்டி:

அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. சுசீலாவின் ஆணைக்குச் சாட்சியமாகவும் விளங்கிய கடிதம், ஜன்னல் கம்பிகளின் வழியே கேள்வி முறையில்லாமல் உள்ளே நுழைந்த காற்றில் அல்லாடியது-அவன் உள்ளத்தைப்

伊一5