பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


போலே! என்னவோ ஒரு வேகம் அரித்தது; நடந்தான்; அக் கடிதத்தை விசுக்கென்று எடுத்தான்; மீண்டான்.

சுசீலாவின் குறிப்புக் கடிதம் இப்படிப் பேசும்:

அன்பான அத்தான்!

பிரசவம் என்கிற கண்டத்திலிருந்து தப்பிவிட்ட எனக்கு-தப்பிப் பிழைத்து விட்ட எனக்கு, என்னவோ சதாநேரமும் மரணப் பயம் தோன்றிக் கொண்டே விருக்கின்றது.எனக்கு அசம்பாவிதம் ஏதானும் ஏற்படும் பட்சத்தில், குழந்தையைக் காப்பாற்றுவது உங்கள் பொறுப்புதான்! எந்தக் காரணத்தைக் கொண்டும் பிள்ளையை வெறுக்கவோ, உதாசீனம் படுத்தவோ கூடாது! உங்களுக்கு எனக்குப் பின் துனே ஒன்று வேண்டாமா?

அருமை சுமதி:

எனக்கு எதுவும் நேராது; நேரவும் வேண்டாம். என் ஆசை அத்தானையும் அன்பு மகனையும் நான் சோதிக்க மாட்டேன். ஆல்ை, ஒருவேளை, விதி என்னைச் சோதிக்க, எனக்கு 'ஏதாகிலும் ஆகிவிட்டால் அப் போது நீதான் என் அத்தானுக்குத் துணையாக அமைய வேணும்; மறந்தி விடக் கூடாது!-நீயேதான் என் அத்தானுக்கு-உன் அத்தானுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட வேண்டும். அப்போதுதான் என் செல்லப்பிள்ளைக்கு உண்மை மிகுந்த ஒரு فلاس (65 ميتي உண்மை அம்மா கிடைத்ததாக அமையும்.

விதியின் எழுத்தைக் கிழிக்கிறேன? இல்லை, கிழிக்கப் போகிறேனே? ஆசிகள்.

இங்ங்னம், சுசீலா சுந்தர்." காலடியோசை கனிந்துவர, மெட்டியொலி இனித்து வத்தது.