பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む姿。

விதியாக உன்கிட்டே ஒப்படைச்சிட்டுக் கண்ணை மூடிக் கிட்டா என் கண்னையும் கட்டிக் காட்டிலே விட்டுட்டுப் போயிட்டா என் சுசீ-என்னுேட அருமைச் சுசி தெய்வம்!... உங்க ரெண்டு பேருடைய காதற் கனவுக்குக் குறுக்கே விதி என்னை அரங்கேற்றிவிட்டதே என்பதை நினைச்சு நினைச் சுத் தான் என் மனசு மறுகி மறுகித் தவியாய்த் தவிச்சிட்டு இருக்குது!...தயவு பண்ணி என்னை நீ மன்னிச்சிடமாட்டியா,

சுமதி' இமை விளிம்புகளிலே முத்துச் சரம் ஊசலாடியது.

சுமதி பேச வாயெடுத்தாள்; தொண்டையை அடைத்தது; இருமலின் பிசிறு சிதறிவிட்டது. அத்தான், நான் சின்னப்பெண்; உங்ககிட்டே பாடம் கற்றுக்கிடக் காத்துக்கினு இருக்கிற சின்னஞ்சிறுசு நான் இந்த ஒரு சத்தியத்தை மட்டிலும் நீங்க எப்போதுமே மறந்திடப் படாதுங்க. எனக்கும் குமாருக்கும் நடுவிலே இருந்து வந்த காதல் விஷயம் சுசீலா அக்காவுக்கு நல்லாய்த் தெரியும். ஆனலும், அதைப்பற்றிய தன் முடிவை அன்றுவரை அக்கா என்கிட்டே எதுவும் சொல்லவே இல்லை! அக்காளுடைய தீர்ப்பைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட நான் துடிச்சுக்கிட்டு இருந்ததும் பொய்யில்லைதான்! இப்படிப்பட்ட இரண்டுங்கெட்ட நிலையிலே, விதி என் அக்காவைச் சோதிச்சுது, இருந்திருந்தாற்போலே!...அக்காளோட ஒரு அன்பு ஆணைக்கு-அதிகாரபூர்வமான ஒரு உத்தரவுக்குக் காத்துத் தவம் கிடந்த என்னிடம் என் தெய்வச் சகோதரி தன்னுடைய ஆணையை-ஆசையைக் கடைசி முத்திரையாக என் வசம் ஒப்படைத்துவிட்டு, விடை வாங்கிக் கொண்டு போய்விட்டாள்.அந்த ஆணையேதான் எனக்குச் சகலமும், அத்தான்! நெஞ்சுணர்ந்த அமைதியான புன்னகை அவள் இதழ்க் கடையில் ஊர்ந்து தெளிந்தது.

தெய்வமே, சுசீலா!' கண்ணிர் சுரந்தது. ராஜாப் பயல் கெட்டிக்காரகை ஆகிட்டான்போலிருக்கே, தானும் தொல்லை கொடுப்பது தவறு அப்படியென்று நினைச்சுச். சமர்த்தாகத் தூங்கிக்கிட்டிருக்கானே?’ என்ருன் சுந்தர்.