பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 சியாங் கே-வேடிக் குழந்தைப் பருவத்தில் மெலிங் திருங்ததாகச் சொல்லப் பட்ட போதிலும், பின்னிட்டு அவர் எப்பொழுதும் திடகாத்திரராகவே இருங்து வருகிருர், உடலின் வலிமையில் அவர் உள்ளமும் பங்கு கொண்டிருக் கிறது. இரண்டும் உருக்கினல் செய்யப்பட்டவை ; அவை வளேயவும் மாட்டா, உடையவும் மாட்டா. எப்பொழுது ஒரு காரியத்தைச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தாலும், உடனே அவர் அதை நிறை வேற்றி விடுவார். எங்த இலாகாவிலும், எக்க விஷயமும் நெடுங்காலம் துரங்கிக்கொண்டிருக்க அவர் விடுவதில்லை. ஆனால், அவருக்குத் தகவல் தெரிய வேண்டியது மட்டும் அவசியம். உடலையும் உள்ளத்தையும் ஒரு யோகியைப்போல் அவர் பண்படுத்தி வைத்திருப்பதால்தான் கினேத்த காரியத்தை விரைவில் முடிக்க முடிகிறது. கெப் போலியன் குதிரைமேல் அமர்த்துகொண்டே சிறிது தாங்கிவிட்டுக் குறித்த கேரத்தில் விழித்து விடுவாராம். பல வருஷப் பயிற்சியினலேதான் இது சாத்தியமாகும். எவன் யாட் - லென்னைப் போல் சியாங் பல பேர்களிடத்திலும் சுமுகமாய்ப் பேசிக் குலாவிக்கொண் டிருப்பதில்லை. எலன் வெளிநாடுகள் பலவற்றிற்குப் பல முறை போய் வந்தவர். சியாங் குக்கு ஜப்பானையும் ரஷ்யாவையும் தவிர வேறு வெளிநாடு தெரியாது. அங்காடுகளிலும் அவருக்கு ஏராளமான நண்பர்கள் கிடையாது. வேடிக்கை யாகவும், விங்கியாசமாகவும் பேசிக்கொண்டிருப் பதிலோ, விவாதம் செய்வதிலோ அவருக்கு விருப்பம் இல்லை. அவர் வாய்விட்டுப் பலமாகச் சிரிப்பது கூடக் கிடையாது. லெனின் சில சமயங்களில் கட்டடம் அதிரும்படியாக உரக்கச் சிரிப்பார் என்று பார்த்தவர்கள் சொல்லுகிரு.ர்கள். காந்தி ஜியோ பெர்க்கை வாயைத் திறந்து சிரிக்காக கேரமே இல்லே.