பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சியாங் கே-வேடிக் அங்கியர் படையெடுத்து வராமல் தடுப்பதற்காக இது அமைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு மேலான அதிசயமாகக் கூறத்தக்க பொருள் இதுவரை உலகில் எதுவும் இல்லே. ஆல்ை இப்பொழுது இதையும் வென்றுவிடக்கூடிய ஒரு மாபெரும் மதிலைச் சீனர் களே மறுபடி சிருஷ்டித்திருக்கிருர்கள். சீனாவிலுள்ள மஞ்சூரியப் படைவீரர்கள் அணிவகுத்து கடக்கும் பொழுது பாடும் பாட்டு இந்த மதிலேப் பற்றி விவரிக்கிறது: 'அடிமையாக வாழும் ஆசை அற்ற மக்கள் யாவரும் படிமிசைப் புதுச் சுவர் படைத்திடுவோம் வாருங்கள் ! உடற்சதையும் உதிாமும் ஒன்று சேர்த்துப் பொழிந்து நாம் உலகிலேயே பெரியமதில் ஒன்றினை எழுப்புவோம்!” உண்மையிலேயே மனித உடல்களால் பாது காப்புச் சுவர் கட்டும் விங்தைதான் புதிய சீனுவில் - விழித்தெழுந்து வீறு கொண்ட சீனவில் - கடை பெற்று வருகிறது ! குடியரசு மாளிகை கட்டி முடிவ தற்குள் பகைவர்கள் வந்துவிட்டால் என்ன ? ஒரு கையால் கட்டடம் கட்டி ஒரு கையால் பகையை விரட்ட வேண்டும் என்றே சேனபதி சியாங் பணித் திருக்கிருர். இரண்டு வேலைகளும் ஏக காலத்தில் இடைவிடாது நடைபெற்று வருகின்றன. கட்டிய பாகங்களை எதிரிகள் குலைத்துக் கொண்டே வருகிருர்கள். இந்த மகோன்னத மாளிகை கட்டி முடிந்த பிறகு உலகம் முழுவதும் இதைக் கண்டு ஆச்சரியப்படும் என்பதில் சந்தேகமில்லை. நீருக்குப் பதிலாக மக்கள் தங்கள் உதிரத்தைக் கொட்டி அமைக்கும் இம் மாளிகையே சீனாவின் கெளரவச் சின்னமாகவும், சீனர்களுடைய வீரத்தின் நிலைக் களன.கவும் விளங்கும்.