பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சியாங் கே-வேடிக் தேசிய ஒற்றுமை முளைப்பதாயில்லே. ஆகையால், சியாங், கோமின்டாங்கின் அநுமதி பெற்று, படைகளை வடதிசை நோக்கிச் செல்லுமாறு உத்தரவு கொடுத்தார். முதலில் அவரும் கூடச் செல்ல வசதி யில்லாதிருந்ததால், சிறிது காலத்திற்குப் பின்னல் தான் அவர் புறப்பட முடிந்தது. லட்சம் படைவீரர் அணிவகுத்துச் சென்றனர். எதிரிகளை ஒவ்வொருவராகப் பிரித்துத் தோற்கடிக்க வேண்டும் என்று சியாங் ஏற்பாடு செய்திருங்தார். முதலாவது வூ பெய்-பூ என்ற பழைய எதிரியைத் தொலைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். வூ வசம் லட்சம் படைவீரர் இருந்தனர். அவர் தேசியப் படைகளின் அளவை அற்பமாகக் கருதியிருந்தார். கூலிப் படைகளை வைத்துக்கொண்டே வெற்றி பெற்று விடலாம் என்பது அவர் நம்பிக்கை. சியாங் 50,000 படைவீரரை மட்டும் பிரித்து யாங்ட்ஸி கதிக்கரைக்குக் கொண்டு சென்ருர். வூ அங்தச் சமயம் வடக்கே போயிருக்தார். இரண்டு படைகளும் பல அரங்கங்களில் போராடின. தேசீயப் படை நான்கு வழிகளில் பிரிந்து சென்று தாக்கிற்று. ஆகஸ்ட் மாதம் சாங்ஷா பிடிபட்டது. அப்பொழுதும் சியாங் ஒர் அறிக்கையை வெளியிட்டார். ராணுவத் தலைவர்கள் சீனவின் வடபாகத்தில் இருங்தாலும், தென்பாகத்தில் இருங்தாலும், சரணுகதி அடைந்து விட்டால் அவர்களைத் தோழர்களாக ஏற்றுக்கொள் வதாகவும், அப்படி இல்லை என்ருல் முடிவு வரை போரிடப் போவதாகவும் அவர் தெளிவாக அறி வித்தார். போராட்டத்தின் காலத்தைக் கூடியவரை சுருக்கிவிட என்னல் இயன்ற அளவு செய்கிறேன். அதன் மூலம் ஜனங்களின் பளுவையும் குறைக் கிறேன் : ஆல்ை புரட்சி பூான வெற்றி பெற வேண்டும், தீமைகள் வேரோடு கல்லி எறியப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.