பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவின் புராதன நாகரிகம் 13. எட்டுக் கால்களும் இருந்ததாயும், பதினெண்ணுயிரம் வருஷமாக அது இருந்து வருவதாயும் கம்பி வந்தார்கள். இத்தகைய கதைகள் எல்லாம் பொது ஜனப் பேச்சோடும் கதைகளோடும் கின்றுவிட்டன. ஆனல் உயர்ந்த சாஸ்திரங்களில் இவைகள் இடம் பெறவில்லை. லா ஒட்ஸி தோன்றிய பின் அவர், சுவர்க்கலோகம் பூமி என்பவைகளை எல்லாம் வணங்கக் கூடாது என்றும், அவை மக்களே மடை யர்களாக்குகின்றன என்றும், அவை ஒன்றை. யொன்று விழுங்கி அழிந்து தொலேயட்டும் என்றும் உபதேசிக்க ஆரம்பித்தார். தத்துவஞான ஆராய்ச்சி' யுடன், அவர் இயற்கையையும் ஆராய்ந்தார். மானிட வாழ்க்கை இயற்கையைப் பின்பற்றி அதனுடன் ஒன்றியிருக்க வேண்டும் என்று அவர் உபதேசித்தார். 'சுவர்க்கமும் பூமியும் தோன்று முன்பு வேறு ஏதோ ஒன்று இருங்திருக்கிறது ; அது உருவற்றதாக, மகா ரகசியமாக, சுதந்தரமுள்ளதாக, மாறுதலற்றதாக, களைப்பற்ற வல்லமை யுள்ளதாக இருக்கிறது ; அதுவே உலகத்தின் தனி முதல் தாயாக இருக்கலாம்; அதற்கு என்ன பெயரிடலாம் என்று தெரியாமல், அதை 'டா ஒ” அல்லது மகா இயக்கம் என்று அழைக்கிறேன்' என்று அவர் ஒரிடத்தில் குறிப்பிட் டிருக்கிரு.ர். அவர் கருத்துப்படி, மக்களின் சக்திக்கும், சுவர்க்கம் அல்லது கடவுளின் சக்திக்கும் அப்பாற்பட்ட இயற்கையான ஒரு மகா இயக்கம் அல்லது பரிணும சக்தியிலிருந்தே உலகமும் சகல ஜீவன்களும் தோன்றியிருக்க வேண்டும். லா ஒட்ஸியின் உபதேசங்கள் சிலவற்றைப் பார்ப்போம் : "நான் மதிப்பு மிகுந்த மூன்று அருமையான விஷ யங்களே உறுதியாக வைத்துக்கொண் டிருக்கிறேன். முதலாவது கண்யம், இரண்டாவது செட்டு, மூன்ருவது அடக்கம். கண்யமாயிரு. நீ தீரமாக இருக்க முடியும்;

=