பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சியாங் கே-ஷேக் ஒவ்வொரு மனிதனும் உணர்வதை எடுத்துக் காட்டி விடுவதே உயர்ந்த கலைஞரின் திறமை. இத்தகைய் கலைஞர் பலர் சீனவில் இருந்திருக்கிருர்கள். 'மிக உயர்ந்த உண்மைகளின் உறைவிடங்களாக இருப்பவைதாம் கலையின் சிகரங்கள்' என்று ஜெர்மானியக் கவி கதே கூறியிருக்கிரு.ர். அந்தக் கலைச் சிகரங்களைச் சீன ஏராளமாகப் பெற்றிருக்கிறது. உயர்ந்த உண்மைகளைக் கண்டுபிடிப்பதில் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஸ்துலமாகக் காணப்படுவதை அப்படியே கலைக்கு உபயோகிப்பது மேல் காட்டு முறை. சிங்தனேயில் ஆழ்ந்து சூட்சும மான உட்பொருளைக் காண்பது கீழ் நாட்டு முறை. வெளிப் பயிற்சியைக் காட்டிலும் நம்மவர் உட்பயிற் சியையே அதிகமாக வற்புறுத்துவர். சீனச் சக்கர வர்த்தி ஒருவர் இயற்கைக் காட்சி ஒன்றைப் படமாக எழுதி வரும்படி டா ஒட்வி என்ற சைத்திரிகரை அனுப்பியிருந்தார். சைத்திரிகர் படம் ஒன்றும் இல்லாமல் வெறுங் கையுடன் திரும்பிவந்தார். மன்னர் வியப்புடன் கேட்ட கேள்விக்கு, நான் என் இதயத்தில் இயற்கையையே கொண்டு வந்திருக்கி றேன் ! என்ரு ராம். கலைகளிலும் கவிதையிலும் சீனர்கள் கருத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்குப் போதிய அவகாசம் இருந்திருக்கிறது. பூமி தேவி விவசாயத்தின் மூலம் அவர்களே உண்பித்து வந்தாள். பதியிைரம் வருஷத் திற்கு முன்பே சீவிைல் விவசாயம் நன்கு வியாபித் திருந்ததாகப் பழைய ஆதாரங்களிலிருந்து சொல்லப் படுகிறது. இன்றும் சீனவின் முக்கியமான முதல் தொழில் விவசாயமாகவே இருக்கிறது. விஞ்ஞானத்திலும் சீன முன்னணியில் கின்று வங்தது. வீடுகட்டுதல், வேட்டையாடுதல், சமைத்தல், இசைபாடுதல், இசைக் கருவிகள் அமைத்தல், விதிகள்