பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சியாங் கே-வேடிக் கியர்களுக்குச் சொந்தமான ஆட்சி முறைகளும் அமைக்கப்பட்டிருந்தன. இவைகளில் நீதி விசாரணை முதலியவையும் அங்கியருடைய உரிமைகளா யிருந்தன. குற்றம் செய்த அங்கியரைச் சீன அர சாங்கம் பிடிக்கவும் முடியாது, பிடித்துச் சீனச் சட்டங்களின்படி விசாரித்துத் தண்டிக்கவும் முடியாது. இந்த முறை உலகத்தில் வேறெங்கும் இல்லாத புதுமையாகச் சீனாவின் மேல் சுமத்தப்பட் டிருந்தது. குத்தகைக்கு விடப்பட்ட ஸ்தலங்களும் பலாத்காரத்திற்குப் பயங்தே விடப்பட்டவை. குத்த கைக் காலம் அநேகமாய் 99-வருவடித்திற்குக் குறை வில்லை. வாங்கியவர்கள், குத்தகைக் காலம் முடிந்த பிறகும், இடங்களைத் திரும்பக் கொடுப்பதில்லை. ஆர்தர் துறைமுகம், தரியன் வளைகுடா-இரண்டையும் ஜப்பான் குத்தகைக்குப் பெற்றிருந்து, காலம் முடிந்த பிறகும், திருப்பிக் கொடுக்காமலே இருந்துவிட்டது. வெளிகாட்டார் கையில் அகப்பட்டுக்கொண்ட இடங்களில் கடந்துவந்த விபசாரம், சூதாட்டம், மதுபானம் முதலிய அக்கிரமங்களுக்கு எல்லேயே கிடையாது. எங்கும் வல்லான் வகுத்ததே வாய்க் காலாக இருந்தது. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்பதுபோல, உலகத்திற்கு இளைத்தது சீன நாடாக இருந்ததால், அது கோடிக் கணக்கான பொருள் நஷ்டத்தோடு இத்தகைய மானபங்கங்களை யெல்லாம் ஏற்கவேண்டி யிருந்தது. கையாலாகாத சீனர்கள் மனக் கசப்பும் கோபமும் கொண்டு கொதித்துக் கொண்டிருந்தார்கள். கால மாறுதலால் சீனவுக்கு இந்த கிலேமை ஏற்பட்டது. இதன் வரலாற்றைக் கவனிப்போம். பதினெட்டாம் நூற்ருண்டின் மத்தியிலே, ஆசியாவின் மணி முடியாகத் திகழ்ந்த நம்முடைய பாரத தேசம் சுதந்திரத்தை இழந்துவிட்டது. 3,000மைல் நீளமும் 2,000-மைல் அகலமும் கொண்ட