பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவும் வல்லரசுகளும் 39 அபினி விற்பதில்லை என்று உறுதிமொழி வாங்கினர். துறைமுகத்திற்கு வரும் கப்பல்களைச் சோதித்து, அபினி கொண்டுவந்த கப்பல்களையே பறிமுதல் செய்துவிடவேண்டும் என்றும், சட்டம் மீறுகிறவர் களுக்கு மரண தண்டனை என்றும் விதிகள் செய்தார். கடைசியாக அவர் பிரிட்டிஷ் வர்த்தகர்கள் சேமித்து வைத்திருந்த 30,391 பெட்டி அபினேயும் பிடுங்கி நடுத்தெருவில் கொட்டிக் கொளுத்தி விட்டார். இதனுல் 1840-இல் பிரிட்டிஷாருக்கும் சீனவுக்கும் பெரிய யுத்தம் ஏற்பட்டு, மூன்று வருஷம் கடந்து வந்தது. சீனவில் அப்பொழுது திறமையான அர சாங்கம் இல்லை. அதல்ை சீன தோல்வியுற்றது. 1842, ஆகஸ்ட் 39வட நான்கிங் நகருக்கு அருகே ஒரு கப்பலில் இருகாட்டுப் பிரதிநிதிகளும் கூடி, முதல் சமாதான உடன்படிக்கையைச் செய்துகொண் டார்கள். அதன்படி, அபினி வர்த்தக நஷ்டத்திற் காகச் சீன பிரிட்டனுக்கு 90-லட்சம் டாலர்களும், ராணுவ நஷ்டத்திற்காக 120-லட்சம் டாலர்களும் நஷ்ட ஈடாகக் கொடுத்தது. மேலும் ஹாங்காங் தீவையும் சீன இழந்துவிட்டது , முக்கியமான ஐந்து வர்த்தக நகர்களையும் உடன்படிக்கைத் துறைமுகங் J, GITIT J5 ஆங்கிலேயருக்குக் கொடுத்துவிட்டது. இப்படி முடிந்த யுத்தத்திற்கு அபினி யுத்தம் என்று பெயர். சீனச் சக்கரவர்த்தியும் சீனர்களும் அங்கி யர்கள் வெறும் அநாகரிகர்கள்' என்று கருதி இது வரை அலட்சியமா யிருந்தனர். இப்பொழுது அங்த அநாகரிகர்க'ளிடம் வெடிகுண்டு என்ற அதிசயமான ஒரு பொருள் இருப்பதை நேரில் ருசி பார்த்துக் கொண்டார்கள். - 1784-இல்தான் முதலாவது அமெரிக்கக் கப்ப லாகிய சீன ராணி கான்டன் துறைமுகத்திற்கு வங்து சேர்ந்தது. 18-ஆம் நூற்ருண்டின் இறுதியில் அமெரிக்க வர்த்தகர்கள் கிழக்கிங்தியக் கம்பெனியோடு