பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ன் யாட்-லென் 79. வந்தார். இதுவரை கான்டன் பகுதியிலேயே புரட்சி செய்து வந்ததால், மேற்கொண்டு பிரெஞ்சுக் காரருக்குச் சொந்தமான டோன் கினுக்கு வடக்கே யுன்ஞ்ன் மாகாணத்தில் முயற்சி செய்யவேண்டும் என். அவர் கீர்மானித்தார். அதன்படியே 1907, அக்டோபரில் அங்கே சென்று புரட்சியை ஆரம் பித்தார். பல இடங்களில் கலகங்கள் கடந்தன. கலகக்காரர்கள் அநேக இடங்களேப் பிடித்துக் கொண்டனர். ஆயினும், சர்க்கார் படைகள் ஏராள மாக வந்து தாக்கியபொழுது, கலகக்காரர்களிடம் போதிய ஆயுதங்கள் இல்லாமற் போயிற்று. அவர்கள் தோல்வியுற்றுக் கூட்டங் கூட்டமாகப் பிரெஞ்சுப் பிரதேசத்துள் ஒடி ஒளிங்து கொண்டனர். ஸ்ன்னும், த்ோழர் சாங்-சாவும் பிச்சைக்காரர்களின் உடை அணிந்து உயிர் தப்பி ஹாங்காங் சென்றனர். வெற்றிகரமான கடைசிப் புரட்சி 1911-இல் ஏற் பட்டது. அதற்கு முந்திய வருஷம் டாக்டர் லன் அமெரிக்கா சென்றிருந்தார். அக்டோபர் மாதத்தி லேயே கலகம் ஆரம்பித்து விட்டது என்று அவருக்கு அவசரத் தந்தி கிடைத்தது. அங்கிருந்து அவர் இங்கிலாந்துக்கும் சென்று புரட்சிக்கு ஆதரவு தேடினர். சீமையில் அவருடைய பழைய நண்பர் டாக்டர் கான்ட் லீ மிக்க உதவியாக இருந்தார். அங் கிருந்தபொழுது அவரைச் சீனச்குடியரசுக்குத் தலைவ. ராகத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கம்பியில்லாத் தந்தி மூலம் தகவல் வங்தது. ஆனால் தேர்தல் மூலம் கலேவ ராக உறுதி செய்யப்பட்டது, பின்னல் 1913 ஜனவரி யில் தான். இந்தத் தடவை புரட்சி, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னலேயே ஆரம்பமாகி விட்டது. ஏனெனில், ஹாங்கோ நகரில் புரட்சிக்காரர்கள் வெடி குண்டு தயாரித்துக் கொண்டிருக்கையில், ஒரு குண்டு திடீரென்று வெடித்துவிட்டது. உடனே அரசாங்கத் துருப்புகள் வந்துவிட்டன. புரட்சிக்காரர்களும்