பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சியாங் கே-வேடிக் வீரர்கள் எல்லோரும் பெருங் துக்கமடைந்து, டாக்டர் ஸன் ராஜிநாமா செய்வதைத் தடுத்தும் பயன்பட வில்லை. ஸ்ன் சுயநலமற்ற மாற்றறியாத பசும் பொன் அல்லவா? அவரிடம் பட்டம் பதவி என்ற ஆசைகள் ஒட்டுமா? தேசத்திற்கு நன்மையெனக் கருதி அவர் யுவானயே தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி நண்பர்களே வேண்டிக் கொண்டார். பதவி கிடைத்ததுமே யுவான் சுய ரூபத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார். பாம்புக்குப் பால் வார்த்தது போலாயிற்று. வரிப்புலி வேங்கை தன் நோயைத் தீர்த்த வைத்தியரையே முதல் ஆகாரமாகக் கொள்வது போல், யுவான் சட்டசபைகளைக் கலைத்து, தம் இஷ்டம் போல் ஆசாமிகளை நியமித்துக் கொண்டு , குடியரசை ஸ்தாபித்த புரட்சி வீரர்களேயே நசுக்க ஆரம்பித்தார். விரைவில் தாமே சீனச் சக்கரவர்த்தி என்றும் விளம்பரம் செய்து கொண்டு, ஜப்பானிடம் அரசாங்கத்தின் பெயரால் ஏராளமான பணத்தைக் கடன் வாங்கித் தம் சொந்த உபயோகத்திற்காக அதை ஒதுக்கி வைத்துக் கொண்டார். நாடெங்கும் சுதந்திர உணர்ச்சி உள்ளவர்களே யெல்லாம் அடக்கி அழித்துவிட முற்பட்டார். வளர்த்த கடா மார்பில் பாய்வதைக் கண்டு, டாக்டர் ஸன் வருங்தினர். வெங்த புண்ணில் வேல் நுழைந்தது போலாயிற்று. வாழ் நாளெல்லாம் அவர் உழைத்த உழைப்பு விழலில் பாய்ந்துவிட்டது; ஆல்ை அவர் சிங்தை தளரவில்லை. மஞ்சு ஆட்சியைக் கவிழ்த்த அதே சக்தி தம்மிடம் மேற்கொண்டும் இருந்ததால், அதைக் கொண்டே யுவானையும் ஒருகை பார்க்கப் போவதாக யுவானுக்கு எச்சரிக்கை அனுப் பினர். கான்டனில் இருந்து கொண்டு அவர் யுவானுக்கு எதிராக இரண்டாவது மாபெரும் புரட் சியை ஆரம்பித்து வைத்தார். புரட்சிச் சங்கம்