பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சியாங் கே-வேடிக் பற்றியே சிந்திக்கலானர். முன்னலும் சீன மக்க ளுடைய கிலேமையைப் பற்றி எண்ணமிட்டு வந்திருந்த போதிலும், இந்த விஷயம் அவரைத் தீவிர மாகச் சிங்திக்கத் தூண்டிவிட்டது. சோம்பலும் அபினைப் புகைப்பது போன்ற துர்ப்பழக்கங்களும், எதை யெடுத்தாலும் நீட்டி கிமிர்ந்து அசமந்தமாக நடப்பதும், அசுத்த வாழ்க்கையும், முற்காலத்தோடு நல்ல காலம் போய்விட்டது, நாம் எக்கேடு கெட்டால் என்ன ? என்ற மூட எண்ணமும், மற்ற காடுகள் எவ்வளவு வேகமாக முன்னேறுகின்றன என்பதைச் சிங்திக்காமல் கிணற்றுத் தவளைகள் போல் வாழ்வதும் சீனர்களை நிலையான அடிமைகளாகச் செய்துவிட்டன என்று அவருக்குத் தெரியும். வந்தவர்களுக்கெல்லாம் . வரவு கூறி ஸலாம் போடச் செய்தவை இந்த வழக்கங்கள்தாம். சுமார் ஐம்பது கோடி மக்களில் பெரும்பாலானவர் வாளேந்தவோ துப்பாக்கி பிடிக் கவோ தகுதியில்லாமல் இருந்ததற்கும் இவையே காரணம். எல்லோரையும் ராணுவ வாழ்க்கையைப் போன்ற கட்டுப்பாடுடைய வீர வாழ்க்கை வாழச் செய்ய வேண்டுமானுல், இவை தொலேய வேண்டும் என்று சியாங் உணர்ந்திருந்தார். இவை தொலைந்தால் சீனர்கள் புத்துயிர் பெற்று மீளுவார்கள் என்பதால், 'நவஜீவன் இயக்கம் என்ற பெயரால் பெரிய இயக்கம் ஒன்றையே அவர் ஆரம்பித்துவிட்டார். நவஜீவன் இயக்கத்தை ஆரம்பித்து வைப்பதற் காகக் கூட்டப் பெற்ற ரு கூட்டத்திலேயே தேசத்தில் எதைச் தேனேக் என்று அவர் விரும்புகிருர் என்பதைக் காட்டுவதற்கு ஒர் உதாரணம் கிடைத்தது. நான்சாங் நகரில் மார்ச் 11வட லட்சம் ஜனங்கள் கூடியிருங்தனர்; 142-ஸ்தாபனங்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டன. கூட்டத்தின் நடுவே புகைப்படம் எடுப்பதற்காக ஒரு சீனன் காமிராவை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும்