பக்கம்:சீனத்தின் குரல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சீனத்தின் குரல்


வருக் கொருவர் தரம் குறைந்த பிரபுக்களாக இருந்தார்கள். அதாவது, பிரபு, கோடீஸ்வரன், லட்சாதிபதி, ஜமீன்தார், மிராஸ்தார், மிட்டாதார், நிலச்சுவான்தார் என்று நம்முடைய நாட்டிலிருப்பதைப் போல. இதன் காரணமாக ஒரு பக்கம் கலகங்களும், மற்றோர் பக்கம் கல்விச் சாலைகளும், மருத்துவமனைகளும் தோன்றிக் கொண்டிருந்தன. இப்படி இருந்த சீனர்கள் கன்பூஷியஸ் காலத்துக்கு. முன்பு, டாய்ஸ் மதத்தைத் தழுவினார்கள் என்று தோன்றுகிறது. கன்பூஷியஸ் காலத்துக்குப் பிறகு இவர் பெயராலேயே ஒரு மதம் தோன்றுகிறது.

கன்பூஷியஸ்

கிருஸ்துவுக்கு முன் 551-ல் ஷங்- டியாங்- ஹெய் என்பவருக்கும், சிங்-டாசி என்ற அம்மையாருக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர்தான் கன்பூஷியஸ். கன்பூஷ்யஸ் என்றால் தத்துவத்தின் தந்தை என்று பொருள். உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும் ஒன்பது. சகோதரிகளும் இருந்தார்கள், கன்பூஷிஸின் ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்து விட்டார். குடும்பம் ஏழ்மையைத் தழுவியிருந்த காரணத்தால் சிறு வயதிலேயே வேலை செய்து பிழைக்க வேண்டியவராய்விட்டார். பத்துப் பனிரெண்டாவது வயதிலேயே சிந்தனா சக்தி அதிகமுடையவராகக் காணப்பட்டார். பதினைந்தாவது வயதில்தான் படிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தது. பத்தொன்பதாவது வயதில் திருமணம் முடிந்தது. ஒரு ஆட்டுப் பண்ணையின் முதலாளி