பக்கம்:சீனத்தின் குரல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சீனத்தின் குரல்


வரலாற்றைச் சொன்னாள். "ஆம், நீ சொல்வதும் உண்மைதான்." என்று சொல்லி அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போய் பக்கத்து கிராமத்தில் விட்டு விட்டு தான் டிஸி என்ற நகரத்திற்குப் போய் அங்கு 15 ஆண்டுகள் ரெவின்யூ அதிகாரியாக வேலை பார்த்து தனது 52-வது வயதில் நீதிபதியாக நியமனம் பெறுகிறார். அந்த காலத்தில் அவர் செய்த சில சீர்திருத்தங்களால், நாடு வலிவடைகிறது என்று பொதுவாகச் சொல்லப்பட்டது. அதே நேரத்தில் நாடு பண்டைய நாகரிகத்தையிழந்து அதுவரை அது போற்றிவந்த தாய்மையையும், பெண்கள் குல பெருமையையும் உயிரோடு புதைத்து விட்டான் கன்பூஷியஸ் என்று பலர் தூற்றினார்கள். இந்த இரண்டுவித நிலமைகளுக்கும் சரியான காரணமில்லாலில்லை.

மிகப் பழைய காலம்

அந்த காலத்தில் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அருமையான படுக்கையைப் போட்டு ஒரு அழகான பொம்மையை அதன் கையில் கொடுப்பார்கள். பெண் குழந்தை பிறந்தால் தரையில் கிடத்தி ஒரு மரத்துண்டை அதன் கையில் கொடுப்பார்கள். பெண்களுக்கு எல்லா வகையாலும் உயர்விருந்த காலத்திலா பெண் குழந்தையை இப்படிச் செய்தார்கள் என்றால், அது. ஆண்களே அன்றிருந்த பெண் உயர்வைப்பார்த்து பொறாமைப்பட்டு கள்ள நெஞ்சத்தோடு வஞ்சம்