பக்கம்:சீனத்தின் குரல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

3


தீர்க்கும் முறையில் இப்படிச் செய்தார்களோ என்று நாம் சந்தேகப்படவில்லை, சீனத்தின் பெரிய எழுத்தாளன், லின் - யு - டாங் என்ற அறிஞனே இப்படி சந்தேகப்படுகின்றான். பெண்கள் தாம் குடும்பத்தின் தலைமைப் பதவியை வகித்து வந்தார்கள். அது மட்டிலுமல்ல, ஆண்கள் பெயர்களுக்கு முன்னால் பெண்களின் பெயர்களைச் சேர்த்து அழைத்துக்கொண்டு வந்தார்கள். பெண்கள் கலந்து கொள்ளாத நிகழ்ச்சிகளே இல்லை. பெண்கள். அவர்களுக்கு இஷ்டமான யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். திருமணம், சமுதாயத்தில் ஒரு முக்கியமான சடங்காகக் கருதப்படவில்லை. அரசனிடம் பக்தியும், விசுவாசமும் கொண்ட குடியானவன் தன் மனைவியை அரசனுக்கே சகல சுதந்திரத்தோடு ஒப்படைத்து விடுவான். மருமகள் விதவையாய்விட்டால் மாமனாரே திருமணம் செய்துகொள்வான். மனைவியின் தங்கையையும் திருமணம் செய்துகொள்வார்கள். அரசியாருக்கும் அமைச்சனுக்கும் கள்ளக்காதல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

கட்டுக்கடங்காத காதலி

Wei - வெய் என்ற ராணி தன் கணவனிடம் ஒரு அழகனைத் தனக்குத் தேடித் தரும்படி கேட்டாள். அவனும் அப்படியே செய்வதாக சம்மதித்து தண்டோரா போட்டு ஒரு அழகனைத் தேடித் தன் ராணிக்கு அளித்தான். அன்றிருந்த பெண்களின்