பக்கம்:சீனத்தின் குரல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

31


வேங்கையாய் வெம்புலியாய் ஆகாமல் ஊர்ந்து செல்லும் பிராணிகளாய்விட்டார்கள். அடிக்கடி இப்படி ஏற்பட்ட தொல்லைகளால் சீனத்தில் நடக்கும் எந்த சடங்காக இருந்தாலும் ஒரே கூச்சல் பயமாக இருந்தது. Noisy Wedding, Noisy funerals, Noisy suffers, Noisy sleeping என்று எழுதுகின்ற லி - யு - டாங்.

செறுக்கு மனப்பான்மை குடும்பத்தில் வளர வளர குழந்தை பருவத்திலேயே பலர் வீட்டைவிட்டு வெளியே ஓட ஆரம்பித்தார்கள். மரணத்திற்காக அவர்கள் அனுசரித்த முறை, அதாவது மனைவி இறந்துவிட்டால் கணவன். ஓராண்டு அழுதுகொண்டிருக்க வேண்டுமென்ற ஏற்பாடு பலரை: பரீட்சையில் கலந்துகொள்ள முடியாமலும், சிலர் மந்திரி பதவியிலிருந்து விலக வேண்டிய நிலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தேவை

இந்த கொந்தளிப்பை யடக்க ஒரு சமூக சீர்த்திருத்தவாதி, புரட்சி மனப்பான்மை கொண்டோனான பொதுநலவாதி ஒருவன் தேவைப்பட்டான். அதுவரை சீனம் சென்றுகொண்டிருந்த கரடுமுரடான பாதையை செப்பனிட ஒரு வீரன் தேவைப்பட்டான்.. இடிந்து விழுந்திருக்கும் சமூக கோபுரத்தைப் புதுப்பிக்க ஒரு நல்ல் கை தேர்ந்த கை வண்ணத்தான் தேவைப்பட்டான். பெண்களை, ஆண்களும்,