பக்கம்:சீனத்தின் குரல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சீனத்தின் குரல்


குறைத்துக்கொண்டு வெறும் எலும்பும் கூடுமாய் போய்விட்டார்கள்.

கன்பூஷியஸத்தைவிட, இந்த அரசன் அளித்த வெகுமதியால் பழைய ரோம் நகரத்து நாரீமணிகளைக் காட்டிலும், நவீன நியூயார்க் மங்கையர்களைக் காட்டிலும் கேவலமாய்விட்டார்கள். முதல் மனைவி உயிரோடிருக்கும்போதே அந்த முதல் மனைவியே பார்த்து வேறொருவளைத் தேடி தன் கணவனுக்கு இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்துவைத்து விடுவாள். ஆனால் புதியதாகக் கொண்டுவரப்பட்டவள் தனக்குதான் அடங்கி நடக்கவேண்டுமேயன்றி தன் கணவனுக்கல்ல என்று அதிகாரம் செய்து கொண்டிருப்பாள்; ஏனெனில் தன் விருப்பப்படி கொண்டு வரப்பட்டவள் அல்லவா அதனால்.

கடைசி வீழ்ச்சி

சீன நாட்டு பெண் குலத்தின் கடைசி. வீழ்ச்சிக்குக் காரணம் அவர்களுடைய கால்களைக் கட்டுப்படுத்தி இரும்பு பூட்சுகளால் குறிக்கிவிட்டதுதான். பெண்களும் எங்கேயும் கண்ட கண்ட விடங்களில் ஓடாமல் செய்ததானது சின. வீரத்தின் பொன்னேடுகளில் ஒரு பெண்ணின் பெயரைக் காண முடியவில்லை. சமூகப் பேராசையால் கட்டப்பட்ட அவர்களுடைய கால் நடையின் வேகம்போலத்தான் சீன சரித்திரமும் இருபதாம் நூற்றாண்டு வரையிலும் ஆமைபோல் நகர்ந்து கொண்டிருந்ததோ என்று எண்ண வேண்டிய நிலை ஏற்படுகிறது, ஓடிப்பாயும்