பக்கம்:சீனத்தின் குரல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

29


போகின்றவனுடைய பிரயாணம் போல் முடிவடைகிறது ஏனெனில், காலையில் கிழக்கு நோக்கிப் புறப்படுகின்றவனுடைய நிழல் அவனுக்குப் பின்னால் தொடர்ந்து வந்து நடுப்பகலுக்கு மேல் முன்னால் வந்துவிடும். இதேபோல் சீன வரலாறு முற்பகுதி பின்னாலேயும், பிற்பகுதி முன்னாலேயும் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த பொருளாதார முறையினால் ஏழைக் குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு ஆடம்பரமான திருமணங்கள் செய்ய முடியாமல் பல குடும்பங்கள் திகைத்தனர். ஆண்களின் ஆடம்பரங்கள் தலை தெறித்துப்போகும் அளவுக்கு வளர்ந்துவிட்டதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சிக் காணப்படுகிறது.

ஒரு அரசன் தன் மாளிகையில் கம்பளத்தை விரித்து அதன்மேல் மாவைத் தூவி, அதன் மேல் பல பெண்களை நடக்கவிடுவானாம். அப்படி நடந்த பெண்களில் யாருடைய அடிச்சுவடுகள் மாவின் மேல் மெதுவாக படிந்திருக்கின்றதோ அவளைப் பஞ்சணைக்கழைத்துக்கொண்டு பகலிரவில்லாமல் பரவசமாகயிருப்பானாம். அதோடு அவளுக்கு பொன்னும் மணியும் தாராளமாக வழங்குவானாம். இந்த, கொடியவன் கையாண்ட மூட முறையால், இவனுடைய அபிமானத்தைப் பெறவேண்டும்மெனக் கருதிய பல பெண்கள் தங்களுக்கு இயற்கையாக இருந்த உடற்கட்டை செயற்கை முறைகளால்