பக்கம்:சீனத்தின் குரல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சீனத்தின் குரல்


யிலும் தன் கற்பைக் காப்பாற்றிவிட்டால் சமூகத்திலேயே மிக உயர்ந்த அந்தஸ்தில் வைத்துப் போற்றப்பட்டாள். சர்க்காரின் கட்டாயச் சேவையிலிருந்தும் இதைப்போன்றவர்கள் விதிவிலக்கு பெற்றார்கள். சீன சர்க்காரின் வரலாறு இதைப் போன்ற தற்கொலைகளையும் வீர மரண நிகழ்ச்சிகளையும் தாங்கித் தாங்கி வளைந்து போயிருக்கின்றது. சீன இலக்கியத்திற்கு பொன்முடியளித்தவர்கள் இதைப்போன்று மாண்ட பெண்கள்தாம் என்று சரித்திரப் பேராசிரியர்கள் செப்புகின்றனர்.

கன்பூஷியஸ் செய்த மாறுதல்படி பொருளாதாரம் ஆண்கள் கைக்கு வந்துவிட்டதால், சீனம் எந்தப் பக்கம் திரும்பினாலும் பொத்திக்கொள்ளும் நெருஞ்சி முள்ளின் நிலையடைந்துவிட்டது.

இதிலும் ஒரு தவறு

இப்படி, ஆண்கள் கையில் வந்த பொருளாதாரத்தாலும், சமூக பலகையில் சம அந்தஸ்தில் வீற்றிருந்த பெண்கள் ஒரே அடியாக கீழே தள்ளப்பட்டதாலும் வைப்பாட்டி முறை வளர ஆரம்பித்தது இந்த கேடான முறைக்கு தூபம் போடுவதைப் போல் பிறகு வந்த Wei - வெய், Ching - சிங் அரசியல்கள் அமைந்தன. இதனால் வைப்பாட்டி முறை வளர்ந்தது மாத்திரமல்ல, கன்னிப் பெண்களுடைய நிலையும் தற்கொலைக் கொப்பானதாக முடிந்தது.

இரண்டாயிரம் ஆண்டு சீன சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் காலையில் கிழக்கு நோக்கிப்