பக்கம்:சீனத்தின் குரல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

27


ஒரு சீடன். தன் குருநாதனான கன்பூஷியசைப் பார்த்து, "ஆண்டவனுக்கு தொண்டு செய்வதெப்படி?" என்று கேட்டான். அதற்கு, "நீ மக்களுக்கே இன்னும் தொண்டு செய்யக் கற்றுக் கொள்ளவில்லையே, ஆண்டவனிடம் ஏன் போகிறாய்," என்று பதில் சொல்லியிருக்கின்றார்.

ஒரு காலத்தில் கற்பைப் பற்றி கவலைப்படாதவர்கள், பிறகு அதை எவ்வளவு போற்றி வளர்த்தார்கள் என்பதற்கு சீன வரலாற்றில் இரண்டு கதைகள் உண்டு.

ஒன்று :- ஒரு விதவைப் பெண்ணை யாரோ ஒரு ஓட்டல்காரன் கையைப்பிடித்து இழுத்தானாம். அதனால் அந்த பெண், அந்த ஓட்டல்காரன் தொட்டு இழுத்தக் கையை வெட்டிக் கொண்டாளாம்.

இரண்டு :- ஒரு பெண்ணுக்கு மார்பில் புண் வந்ததாம். அதை டாக்டரிடம் காட்டினால் கற்பழிந்துவிடும் என்று கருதி அந்த வியாதியாலேயே செத்துவிட்டாளாம்.

தனக்கு விருப்பமான வாலிபனைத் தன் கணவன் மூலமாகவே பெற்று அனுபவித்து வந்த இனம் - தன் உறுப்புகள் எதையுமே எந்த ஆபத்திலும் ஆண்கள் பார்க்கக்கூடாதென்ற அளவுக்கு தலை கீழாக மாறிவிட்டது. இப்படி இறந்தவர்களை வீர மரணத்துக்குறியவர்களாக எண்ணி போற்றி வந்தனர் சீனர்கள். ஒருவள் ஐம்பது வயது வரை