34
சீனத்தின் குரல்
தலைவன் சன்-யாட்-சன் பிறப்புக்கும் ஒன்பது ஆண்டுகள்தாம் காலம் விட்ட இடைவெளி.
'உள்ளே நுழைந்த கள்ளன்' என்று சீன நாட்டிற்குள்ளே நுழைந்த அபினியைப்பற்றி உரத்தக் குரலில் சொல்லிவிடலாம். சீனத்தின் சொத்துக்களை மாத்திரம் அது களவாடவில்லை. நாகரிகம் பண்பாடு ஆகியவைகளை மட்டிலும் அது சூறையாடவில்லை, சீனத்தின் சிந்தையையே கலக்கிவிட்டது. இந்த மருந்தின் மயக்கம் தொடங்கிய பிறகு நீண்ட நாட்கள் வரையிலும் வெளி நாட்டாராதிக்கம் நிலை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியால், அண்டையிலிருந்த சகோதர நாடான சீன நாட்டை சீர் குலைய செய்வதற்காக சீமையர்கள் கொண்டுபோன அபினியை உற்பத்தி செய்து கொடுத்தது இந்தியா தான் என்று படிக்கும்போது உள்ளபடியே வெட்கப்பட வேண்டியதாகிறது. அதுவும் சுதந்திர வீரர்கள் தோன்றியதாகச் சொல்லப்படும் வங்காளத்தில்தான் அபினி செய்யப்பட்டது.
அபினியைக் கொண்டு சென்ற கம்பெனிகளைப் பற்றியும். கொள்ளை லாபத்தைப்பற்றியும் லூப்பாக் Lubbock என்பவன் பின்வருமாறு எழுதுகிறான்.
"சீனத்திற்கு அபினியையேற்றிச் சென்றவர்கள் கடலாதிக்கம் பெற்றவர்களாகவும், முரட்டு தைரியமுடையவர்களாகவும் இருந்து இவர்கள்