பக்கம்:சீனத்தின் குரல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

35


செய்த அபினி வியாபாரம் பெரிய அளவில் லாபத்தைத் தந்தது என்று, சொல்வதைவிட, ஏராளமான பொருள்களை கொள்ளையடிக்க உதவி செய்தது எனலாம்."

இப்படி இந்த கொள்ளையைத் தொடங்கிய கம்பெனிகள், பிரிட்டிஷாருக்குச் சொந்தமான ஜார்டின் Jarden கம்பெனி, மேதிசன் கம்பெனி MatheSon & Co, டெண்ட் & கம்பெனி Dent & Co, அமெரிக்காவுக்குச் சொந்தமான ரஸ்ஸல் கம்பெனி Russel & Co, பாரசீகத்துக்குச் சொந்தமான பான்ஜீ கம்பெனி, Banjee Company.

இந்த கம்பெனிகளும், இவைகளைத் தொடர்ந்து பல சில்லரை கம்பெனிகளும் செய்த கைங்கரியத்தினால் தான் சீன மக்கள் மயங்கி தங்கள் விலையுயர்ந்த பொருள்களையும் விவேகத்தையும் இந்த வீணர்களிடம் விட்டுவிட்டார்கள்.

முதல் அபினிப் போர்

போதை வளர வளர பொறாமையும், அசூயையும் வளர்ந்தது. நாட்டினுள் சாதாரணமாக அனுமதித்துவிட்ட அபினியை வாள் கொண்டு வெளியே விரட்ட முடியவில்லை. சுத்த இரத்தத்தை நஞ்சாக்கும் நாச மருந்தை ஒரு சாதாரண நாயென மதித்து உள்ளே வரவிட்ட மக்கள், சிங்கமெனப் பாய்ந்து ஒவ்வோர் சீனனின் இரத்தத்தைக் குடிப்பதைக் கண்டார்கள். அந்த போதையில் மயங்காத பொருள்