36
சீனத்தின் குரல்
கள் எவையாவது இருக்குமானால், அவை உயிரில்லாத இரும்பு, எஃகு, மரச்சாமான்கள், தட்டுமுட்டு, பாய்த் தலையணை, இவைகளாகத்தானிருக்க முடியும், புரையோடிப்போயிருக்கும் புண்ணின் மேல் ஈக்கள் முய்த்து உபத்திரவத்தையுண்டாக்குவதைப் போல் சீன மக்கள் அதிலும் குறிப்பாக சிலர் நெளிய ஆரம்பித்தனர். ஆயுதமெடுத்தனர், ஆர்ப்பரித்தனர். யுத்த மேகங்கள் சூழ சீன இராணுவ தமுக்கில் போர் முழக்க மெழுப்பினார்கள். நாடு பிடிக்கும் , ஆசையாலல்ல. வெளிநாட்டாரான பிரிட்டானியர், அமெரிக்கர், ஜர்மானியர், ஜப்பானியர், பாரசீகர்கள் ஆகியோரை ஒரேயடியாக வெளியேற்ற வேண்டுமென்ற சுதந்திர எண்ணத்தோடு மாத்திரமல்ல, நாட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அபினியை அடியோடு தொலைக்க வேண்டும் என்ற எண்ணத்தாலுந்தான். அந்த எண்ணத்தால் ஏற்பட்ட அனல் மூச்சின் முடிவாக 1844-ம் ஆண்டு ஏற்பட்ட முதல் அபினிப் போரில் சீனர்களுக்குப் படுதோல்வியையும் ஆங்கிலேயர்க்கு அளவிட முடியாத வெற்றியையும் அளித்தது, அதாவது, தோற்ற சீனம், வென்ற வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்கு நஷ்ட ஈடாக ஆறு துறைமுகங்களையும், பல லட்சம் டாலர்களையும் கொடுக்க வேண்டுமென்ற முடிவோடு முடிவடைந்தது முதல் அபினிப் போர்.
சீனர்களுக்கு படுதோல்விதான் என்றாலும் அதுவரை அபினியின் ருசியைக் கண்டவர்கள் வாளின் மேல் வழிந்தோடிய இரத்த ருசியைக் கண்