பக்கம்:சீனத்தின் குரல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

37


டார்கள் ஆண்டவனாலும் நிலைநாட்ட முடியாத அமைதியை ஆயுதத்தால் நிலைநாட்ட முடியும் என்று அரசியல் கற்பிக்கும் பாடத்தின் முதலேட்டை படிக்கத் தொடங்கிவிட்டனர். பணத்தால் வாங்கிய போதை, மதத்தால் வாங்கிய சாந்தி ஆகியவைகளை சீற்றத்தால், வாங்கிய செங்குருதி கலந்த மண்ணில் புதைக்கவேண்டுமென்ற வீர உணர்ச்சியைப் பெற்றார்கள். போர் நெருப்பு அணைந்துவிட்டது என எண்ணினர் அயல்நாட்டாரை நிறுத்த எவ்வளவோ தடுப்பு சட்டங்கள் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான அபினிப் பெட்டிகளை நடுக்கடலில் தள்ளினர். எஞ்சிய பெட்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர், எனினும் கள்ளத்தனமாக அபினி சீனத்துக்குள்ளே செல்வது நின்றபாடில்லை. ஏனெனில் லட்சக்கணக்கான வீரர்களை களத்தில் பலியிட்டாலும் ஒரு நாடு கிடைக்குமோ கிடைக்காதோ. ஆனால் இது அப்படியில்லை. ஒரு பத்து அபினிப் பெட்டிகள் ஒரு துறைமுகமே கிடைக்கும், சூறையிடுவதற்கேற்ற செல்வர்களின் மாளிகைகளே கிடைக்கும்... இதைவிட நாடுகளைப் பிடிக்கும் சுலபமான வழி வேறொன்றுமில்லை. ஆகையால் அபினியை விற்று பல்வகையில் லாபமடைந்த வெளிநாட்டார், எவ்வள்வு தடுத்தும் நின்றார்களில்லை.

இரண்டாவது அபினிப்போர்

முதலில் நடந்த அபினிப் போருக்குப் பிறகு சட்ட ரீதியான எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டும் எதிரிகளின் ஆசை அடங்காதக் கார-