பக்கம்:சீனத்தின் குரல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சீனத்தின் குரல்


ணத்தால் பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 1857-ம் ஆண்டு சீனர்கள் சமர்க்களம் நோக்கி வரவேண்டியிருந்தது. இரண்டாவது முறையாகப் போர் முகங்காணும் சீனவீரர்கள் போரையே நடத்தி நடத்தி ஒவ்வொருவனும் போர் வாளாக மாறிவிட்ட வெள்ளையரை எதிர்த்து நிற்க முடியாமல் இரண்டாவது முறையாகவும் தோல்வியுற்றார்கள், பல தோல்விகள் ஒரு வெற்றிக்கு வழிகோலுவதைப் போல், புதியதாக போர்த்தொழிலைத் தொடங்கியிருக்கும் சீனர்கள் இரண்டாவது முறையும் தோல்வியுற்றதை தோல்வியாகக் கருதாமல் சிறந்த அனுபவக் கோட்டையின் இரண்டாவது வழுக்குப்படியிலிருந்து கீழே சருக்கி விழுந்துவிட்டதாக எண்ணினார்கள். இந்த இரண்டாவது போரின் முடிவு சீன சாம்ராஜ்யத்தின் பிரபல தலைநகரான பீகிங் Peiking நகரம் ஆங்கிலேயர் வசமாயிற்று.

அரசாங்கம்

இந்த கொந்தளிப்பில் சீனமக்கள் லட்சக்கணக்கானவர்கள் மடியுமளவுக்கு அன்றிருந்த மஞ்சு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதையரிய ஆவல் தோன்றுகிறது. இவ்வளவு வெளிநாட்டார் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்த காரணமாயிருந்தது இந்த மஞ்சு அரசாங்கத்தான். மக்கள் மடிந்து போனாலும் தன் சாம்ராஜ்ய கண்ணியத்திற்கு கடுகளவும் கேடு வரக்கூடாதென்றெண்ணியதால், தான் கொடுக்கக்கூடாத பல உரிமைகளைத் தந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டது. அதன்