பக்கம்:சீனத்தின் குரல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சீனத்தின் குரல்


போலவே எல்லா வகையாலும் சிறப்புற்றிருக்கும் போது அகண்ட விரிவும் அதிக மக்கள் தொகையும் கொண்ட நம் நாடு இந்நிலையடைந்திருப்பதற்குக் காரணம் என்ன? என்பதை கூர்ந்து கவனிக்கிறார். காலத்துக்கேற்றவண்ணம் அரசியல் பொருளாதாரம் சமூக இயல் ஆகியவைகளை மாற்றிக்கொள்ளாத நாட்டின் கெதி இதுதான் போலும், என எண்ணினார், ஜப்பான் மேல்நாட்டைப் போலவே தன் நாட்டை மாற்றியமைத்துக் கொண்டதால் ஒரு வல்லரசாக பல பெரியநாடுகள் பார்த்து அஞ்சுமளவுக்கு இருப்பதை ஆராய்ந்து அதிலிருந்து ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார். பழைய முறையில் விவசாயத்தை நம்பிக்கொண்டிருக்கும் நாடு விஞ்ஞானத் துறையில் தொழில் வளப்பங்கொண்ட நாட்டை எந்தக்காலத்திலும் வெல்லமுடியாதெனக் கண்டார். கிருஸ்து மதத்தின் மகிமைதானோ, இப்படி. அயல், நாட்டாரிடம் கருணைகாட்டாமல் நடந்துகொள்ளத் தூண்டுகிறது என்ற சந்தேகத்திலாழ்ந்துவிட்டார். எல்லா வசதிகள் இருந்தும் ஏதோ ஒரு விசை சீன நாட்டுக்கில்லை. அந்த விசையைக் கண்டுபிடித்து இயக்கினால் சீனம் கண்டிப்பாக இயங்கும் என்பதைத் திடமாக நம்பினார். அன்று முதல் அவர் தனி மனிதனுக்குச் செய்யவேண்டிய இரணசிகிச்சையை மாத்திரம் பெரிதென எண்ணவில்லை.

நாட்டுக்கே இரண சிகிச்சை

அன்று முதல் இரண சிகிச்சையை நாட்டுக்குச் செய்யவேண்டிய முறையை கவனித்தார். பெரிய