பக்கம்:சீனத்தின் குரல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சீனத்தின் குரல்


3. லியாங்-சி. சியோ , Liang - Chi- Chio என்பவர், சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம், பொதுக்கல்வி, உத்தரவாதமான பிரதிநிதித்துவக் குடியரசு என்பவைகளைப்பற்றி எழுதித் தந்தார்.

4. டாக்டர் சன் -யாட்-சன் மஞ்சு அரசாங்கத்தை ஒழிக்கும் விதத்தையும் அதற்காக ஏற்பட வேண்டிய பொதுவுடமைக் கொள்கை, நாட்டுப் பற்று என்பவைகளைப்பற்றி எழுதித் தந்தார்.

இந்த நால்வர் எழுப்பிய குரலோசையால் தத்துவத் தாகத்தையும், விஞ்ஞான விளக்கத்தையறிய வேண்டுமென்ற ஆர்வத்தையும் தூண்டியது. இதில் அரசாங்கத் தேர்வு முறையை அடியோடு ஒழித்து பள்ளிகளின் பாடபோதனை முறைகளை காலத்திற்கேற்றவண்ணம் மாற்றி அமைத்து, எவைகளை போதிப்பது, எப்படி போதிப்பது, பட்டம் பெறுபவரிகளுடைய அந்தஸ்தை உயர்த்துவது எந்தவகையில், இலக்கிய சுவை மிகுந்த பாடங்களையுண்டாக்குவது எங்ஙனம், பெண்ணடிமையை ஒழித்து, கன்பூஷியசத்தால் உண்டான மாற்றங்களை தற்காலத்துக்கேற்றவாறு மாற்றி, அறிவு சார்ந்த எண்ணங்களைத் தூண்டி. பெரியோர்கள், அதிகாரிகள், அறிவாளிகள் ஆகியோரிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டிய முறைகள், சட்டத்தை மதித்து, அரசாங்க ஊழியத்தில் எள்ளளவும் கடமை தவறாமல் நடந்து கொள்ளவேண்டிய பொறுப்பு, தனி மனிதன் செய்யும் குற்றங்கள் சமுதாயத்தைப் பாதிக்காமல் இருக்க வேண்டியதற்கான தற்காப்பு முறைகள்