50
சீனத்தின் குரல்
களை சிமிட்டி பீப்பாய்களில் அடைத்து சைனாவுக்குக் கொண்டுவந்தார். அந்த பீப்பாய்களை சீனத் துறைமுகத்தில் இறக்குமதி செய்து கொண்டிருக்கும்போது ஒரு பீப்பாய் தவறி கீழே விழுந்து உடைந்து. தீப்பிடித்துக்கொண்டது. உடனே பரபரப்படைந்த சுங்க அதிகாரிகள், இது சன்யாட்சன் செய்த சதிதான் என தீர்மானித்தனர். உடனே சன்-யாட் சன்னைத் தேட விரைகின்றனர். இதனால் மீண்டும் அமெரிக்காவுக்கு தலைமறைவாக ஓடிப்போகின்றார். அங்கிருந்தபடியே புரட்சிக்குப் பல ஏற்பாடுகளைச் செய்து 1911-ம் ஆண்டு சீனாவுக்குத் திரும்பி புரட்சியை வெற்றிகரமாகச் செய்து மதம் பிடித்தலைந்த மஞ்சு ஆட்சியை கவிழ்த்து விட்டார். இந்தப் புரட்சிக்குப் பெருந்துணை புரிந்தவன், மஞ்சு மகாராணியிடம் முதல் மந்திரி பதவியிலிருந்த யுவான்--ஷி--கே என்பவன்தான். இந்த மாதிரி எதிரியின் கையாளிடம் உதவி பெறுவது அரசியல் மாற்றங்களில் சர்வசாதாரணமானதாகவும், புரட்சி காலங்களில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது, மேலும் பிரதமர் யுவான்- ஷி - கே மகாராணியாரின் மந்திரியாரே தவிர சன்- யாட்-சன் வகுத்தத் திட்டங்களுக்கு விரோதியல்ல. பிற்காலத்தில் வேண்டுமானால் யுவான்-ஷி-கே சன்னுக்கு விரோதமாக மாறலாம், அதுவல்ல முக்கியம். இப்போது நடந்து கொண்டிருக்கும் புரட்சிக்கு யார் யாரிடமிருந்து உதவிகள் கிடைக்கின்றனவோ, அவர்கள் நண்பர்களாயிருந்தாலும் சரி, பகைவர்