உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

51


களாயிருந்தாலும் சரி உதவி பெற்று முக்கியமான குறிக்கோளை முடிக்க வேண்டியதுதான் அரசியலின் முக்கியமான தத்துவமாகக் கருதப்பட்டதால் இந்த உதவியை பெற்றதில் ஆச்சரியமில்லையென்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அதுவும் இருபதாம் நூற்றாண்டில் இதைப்போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதாரங்கள் பலப் பல.

மேலும் இந்த புரட்சியில் யுவான்-ஷி-கேயின் உதவி கிடைக்காமலிருந்தால் புரட்சி படைக்கும், படையின் தலைவனுக்கும் பேராபத்து வந்திருக்கும். எப்படியோ ஒருவிதமாக மஞ்சு முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை ஸ்தாபித்துவிட்டார்கள். மன்னர்களாட்சியின் கடைசி ஏடு காலச்சுவட்டிலிருந்து கிழிக்கப்பட்டுவிட்டது. முடிந்தது மஞ்சு சர்க்கார். முடி துறந்தாள் மகாராணி. மக்கள் துன்பத்தை விட்டார்கள். குடியரசுக் கொடி கீழ்க்கோடியிலிருக்கும் பெரிய நாட்டில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கின்றது. புதியதாகப் பெற்றெடுத்தக் குடியரசுக் குழந்தையைப் போற்றி வளர்க்க வேண்டும். இதுதான் அன்றிருந்த அரசியல் தலைவர்களின் ஒரே கவலை. நாட்டை செப்பனிடும் நற்பணியில் ஈடுபடவேண்டுமென்ற எண்ணத்தால், தனக்கிருந்த குடியரசுத் தலைவர் பதவியை மகாராணியாரிடம் மந்திரியாக இருந்து கொண்டே புரட்சிக்குப் பேருதவி புரிந்த யுவான்-கி-ஷே என்பவரிடம் ஒப்படைத்தார் சன்.