பக்கம்:சீனத்தின் குரல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சீனத்தின் குரல்


தில் மலைகளுக்குப் போய்விடுவது வழக்கமாம். ஆகவே மலை அல்லது மலையடிவாரங்களில் பிறப்பவர்களுக்கு மேன்மையையும் நம்பிக்கையையும் தந்து வந்தார்கள். மேலும் ஷேக்கின் தந்தை கிராம பஞ்சாயத்துகள், சண்டை சச்சரவு முதலான தகராறுகளில் நியாயத்தை வழங்கும் நீதிபதியாக இருந்ததால் பலருக்கு அறிமுகமானவராக இருந்து வந்தார். அதனால் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தையைப் பற்றி ஞானியாவான், தீர்க்க தரிசியாவான் என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.

ஷேக், தன்னுடைய ஐந்தாவது வயதில் தாயையும், ஒன்பதாவது வயதில் தந்தையையும் இழந்து விட்டதால், தன் சிற்றன்னையான தன் தந்தையின் மூன்றாவது மனைவியால் வளர்க்கப்பட்டு அந்த கிராமப் பள்ளிக்கூடத்திலேயே படித்துக் கொண்டிருந்தார்.

அதுவும் ஒரு நன்மைக்குத்தான்

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் பலவித வேலைகளைச் செய்ய வேண்டி வந்தது. தாய் தந்தையற்றக் குழந்தையை இப்படி வீடு கூட்டச் செய்வதும், சாமான்களைத் துலக்கச் செய்வதும், தண்ணீர் கொண்டுவரச் செய்வதும் சரியல்லவென்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஷேக்கின் சிற்றன்னையைக் கண்டிப்பார்கள். அந்தம்மையார் மாற்றாந்தாயின் மனப்பான்மையால் இதைச் செய்யவில்லை என்பது ஷேக்கின் மூலம் தெரிகிறது. தனக்குக் குழந்தைகள் இல்லாத