பக்கம்:சீனத்தின் குரல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

57


தின் நிலை. உரத்தக் குரலில் உரிமையைக் கேட்டவர்களை ஒரு வெறி பிடித்த சர்க்கார் என்னென்ன செய்யுமோ அதையே இவனும் செய்யத் தலைப்பட்டான். வயிற்றுவலி போய் குடல்வலியும் கண்வலியும் கூடவே தலைவலியும் வந்ததைப்போலாய் விட்டது. மஞ்சு சர்க்காரைத் தொலைத்த மக்கள் இந்த மாபாதகனை எப்படி தொலைப்பது என்ற பீதியில் மீண்டும் அகப்பட்டுக் கொண்டார்கள். தக்க வீரன் கிடைக்கவில்லை, தவித்தனர். ஜப்பானிடம் ஏராளமான கடன் வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு எதிர்க்க வருகின்றவர்களை பணக் குண்டா லடித்து பல்லைப் பிடிங்கி விடுகின்றான். மறுபடியும் ஓர் பயங்கரச் சூறாவளி சீன நாட்டை வளைத்துக் கொண்டது.

தோன்றினான்

குறிப்பு - மீண்டும் வரலாற்றை 1837-க்குக் கொண்டு போகின்றோம். இங்கே மீண்டும் சன்-யாட்-சன் பெயர் அடிபடுகிறது. வாசகர்கள் வசதிக்காக.

1887-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 31-ம் நாள் சிக்கோ Chicko என்ற ஊரில் சு-ஆன் என்பவரின் இரண்டாவது மனைவியின் வயற்றில் பிறந்தான் சியாங்-கே-ஷேக். சிக்கோ என்றவூர் ஒரு மலையடிவாரத்திலிருந்தது. மலையடிவாரத்திலுள்ளவர்களில் பிறப்பவர்களுக்கு சீனத்தில் அதிக மரியாதையுண்டு. ஏனெனில் சீன் ஞானிகள் எல்லாம் கடைசி காலத்-