பக்கம்:சீனத்தின் குரல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சீனத்தின் குரல்


பகுதிக்கு அனுப்பப்பட்டப் படைகளுக்கு படு தோல்வி என்று அடிக்கடி செய்திகள் வந்தும், எப்படியாகிலும் வடகோடிக்கப்பால் கம்யூனிஸ்டுகளை விரட்டி விட்டுத்தான் திரும்பவேண்டும் என்று படைத் தலைவர்களுக்கு கண்டிப்பான உத்திரவு போட்டு விடுகின்றார் சியாங் கே-ஷேக்.

இந்த நிலையில் கம்யூனிஸ்டுகளுக்கு இரண்டு தொல்லைகள். ஒன்று :- சியாங் அனுப்பிய படைகள் மூலம், மற்றொன்று :- ஜப்பானியர்களால். இந்த இரண்டு படைகளை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்ட கம்யூனிஸ்டுகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது :--

ஜப்பானியர்களை எதிர்த்துத் தோற்கடித்தால் நாட்டின் பொது எதிரியை தோற்கடித்த நல்ல பெயர் தங்களுக்குக் கிடைக்குமென்று நினைத்தார்கள்.

அடுத்து - சியாங்-கே-ஷேக்கைத் தோற்கடித்தால் அவனுடைய சர்வாதிகாரத்தை ஒழித்து நாட்டில் நல்லாட்சி நிறுவலாம் என்பது மற்றோர் எண்ணம்.

இந்த எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்ட போராட்டம் தொடர்ந்து நடப்பதைப்பற்றி சியாங் - கின் தளபதிகள் யோசிக்கத் தொடங்கினார்கள். நாம் கம்யூனிஸ்டுகளோடு போராடுவது நியாயந்தானா, ஒருகால் சியாங்கின் மனதில் ஏதாவது கெட்ட