பக்கம்:சீனத்தின் குரல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

71


மக்கள். தக்க தலைவர்கள் தோன்றியும் தங்கள் நிலையுயராதது கண்டு கலங்கினார்கள். இதை இப்படியே விட்டுவிட்டால் கொலை, கொள்ளைகள்தான் நடை பெறும். ஆனால் இந்த நிலை நீடிக்க முடியாமல் திடீரென ஒரு மாறுதல் ஏற்பட்டது. அந்த மாறுதலையுண்டாக்கியவர் சியாங்-கே-ஷேக்.

தளபதியின் ஓட்டம்

சியாங்-கெ-ஷேக் எப்படியாகிலும் கம்யூனிஸ்டுகளை, நாட்டை விட்டு ஓட்டினாலன்றி சீனத்தில் அமைதி நிலவ முடியாதென்று நினைக்கின்றார். இந்த அவருடைய எண்ணத்தில் நாட்டின் முன்னேற்றம் முதலிடம் பெறவில்லை. தன் கட்சியான கொமிங்டாங் கட்சி ஓங்கி வளர வேண்டுமென்பதும் நாடு அடையப்போகும் நலனுக்கு தன் பெயர் அடிபட வேண்டும் என்பதே அவருடைய முழு நோக்கமாகக் காணப்படுகிறது. உள்ளும் வெளியுமாக இரண்டுவித நோக்கங்களை வைத்துக்கொண்டிருந்த காரணத்தால் ஜப்பானியர்களை விட மிக மோசமான எதிரிகள் கம்யூனிஸ்டுகள்தாம் என்ற முடிவுக்கு அவர் வரவேண்டியிருந்தது. மேலும் அங்கு அன்றிருந்த கம்யூனிஸ்டுகளின் போக்கும் அவ்வண்ணமிருந்தது போலும், ஆகவே அவர் கொண்டிருந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள முடியாமல் முரட்டுப் பிடிவாதக்காரராய் விட்டார். அதுவே அவருடைய வீழ்ச்சிக்கும் காரணமாகிறது.

தன்னுடைய இராணுவம் முழுவதையும் திரட்டி வடபகுதிக்கு அனுப்புகிறார். அப்படி இவரால் வட