உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சீனத்தின் குரல்


ஜப்பான அடக்கமுடியவில்லை. எல்லாம் தொடை நடுங்கிகள் சங்கம், என்று ஆத்திரமடைந்த சீனர்கள் அதிருப்தி கொண்டனர். ஜப்பான் படையெடுப்பு, மஞ்சூரிய வீழ்ச்சி, உள்நாட்டில் அதிருப்தி, ஷேக்கின் சர்வாதிகாரம், கம்யூனிஸ்டுகளின் கலக்கம் ஆகிய சூழ்விலைகள் அவ்வளவும் ஒன்றாகத் திரண்டு உள்நாட்டிலேயே மூன்று போர்முனைகளை யுண்டாக்கிவிட்டது.

உள்நாட்டில்

கொமிங்டாங் கட்சிக்கு - கம்யூனிஸ்டுகளும் ஜப்பானியரும் விரோதிகள்.

கம்யூனிஸ்டுகளுக்கு - ஜப்பானியரும் கொமிங்டாங் கட்சியினரும் விரோதிகள்.

ஜப்பானியருக்கு-கொமிங்டாங் கட்சியினரும் கம்யூனிஸ்டுகளும் விரோதிகள்.

இந்த நிலையில் சீன மக்கள் எந்த விதமான பயத்தை அடைந்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். ஒரு பக்கம் ஜப்பானியர் தாக்குதல், மற்றொர் பக்கம் கொமிங்டாங் தாக்குதல், பிரிதொரு பக்கம் கம்யூனிஸ்டுகளின் தொல்லை. 'என் கட்சியில் சேரு', 'என் கட்சியில் சேரு' என்ற இழுப்பு. இதன் காரணமாக ஆங்காங்கே ஏற்பட்ட சிறு சிறு கலகங்கள், இவைகளே அடக்க இராணுவ சட்ட அமுல். இவ்வளவுக்குமிடையே செக்கில் அகப்பட்ட எள்ளென நசுங்கினர்கள்