பக்கம்:சீனத்தின் குரல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

75


ஊரில் அவர் தங்கியிருந்த ஓட்டலை முற்றுகையிட்டு கலவரம் செய்தனர். வெளியே நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் தன்னைக் கைது செய்வதற்காகத்தான் என்று தெரிந்துகொண்ட சியாங்-கே-ஷேக் ஜன்னல் வழியாக கீழே குதித்து கை கால்களில் காயங்களோடு பக்கத்திலிருந்த மலையில் போய் ஒளிந்து கொண்டார். அங்கேயும் விடாமல் பின்தொடர்ந்து போய் கைது செய்துவிட்டான் சன்-மிங்-சு. ஆனால் சியாங்கை நடத்தி அழைத்துக்கொண்டு வரமுடியவில்லை. ஏனெனில் சியாங் அவ்வளவு காயமடைந்து மயக்கமுற்றுக் கீழே விழுந்து கிடந்தார். ஆகையால் தோளிலே தூக்கிக்கொண்டு வந்து பத்திரமாக பாதுகாவலில் வைத்துவிட்டான்.

விடாப்பிடி

அவரைக் கைது செய்ய வேண்டுமென்று கட்டளையிட்ட தளபதி அவரை சிறையில் சந்தித்து எவ்வளவோ கேட்டுக்கொண்டும் தன் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ள மறுத்துவிட்டார். இந்த நிலையில் தன்னுடைய செய்கை குற்றமற்றது என்று சியாங்கை தலைவராக் கொண்ட நான்கிங் சர்க்காருக்குச் சொல்லித் தீரவேண்டிய நிலை தளபதி சாங்-சியு-லியாங் என்பவருக்கு வந்துவிட்டது. அதனால் ஒரு நீண்ட அறிக்கைத் தயார் செய்தார். அதில்,

"சியாங்-கே-ஷேக் பலமுறைகளில் பழிவாங்கும் உணர்ச்சியோடு நடந்து கொண்டிருக்கின்றார். தனக்கு பல வழிகளில் போராற்றலிருந்தும் பக்கத்