உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சீனத்தின் குரல்


கொண்டிருக்கும்போதே சியாங்கின் மனைவியும் மைத்துனனும், சியாங்கின் ஆலோசகரான டோனால்டும் சிறையில் அவரை நேராக சந்தித்துப் பேசி அவர் விடுதலையடையும்படிச் செய்துவிட்டார்கள். இதனால் மந்திரிகள் திட்டம் தவிடுபொடியாய் விட்டது.

விடுதலை

1936 டிசம்பர் 25-ல் சியாங்கை விடுதலை செய்து தளபதி சாங்- சியூ - லியாங் தன் சொந்த விமானத்திலேயே அவரை ஏற்றிக்கொண்டு சோயா என்ற நகரம் வரையிலும் போய், அங்கிருந்து தலைநகரான நான்கிங் வரையிலும் சியாங்கின் சொந்த விமானத்தில் கொண்டு போய் சேர்த்துவிட்டார்.

லியாங் கைது

சியாங்கை பாதுகாவலில் வைத்துக் காப்பாற்றி சர்க்காரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டுமென்று கொண்டுபோன தளபதி சாங்-கிங்-லியாங் என்ற தளபதியை நான்கிங் சர்க்கார் கைது செய்து இராணுவ உயர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விடுகிறது. பத்து ஆண்டுகள் தண்டனையளித்து விடுகிறது நீதி மன்றம். ஆனால் சியாங் அந்த தண்டனையை உடனே ரத்து செய்து விடுகின்றார். இந்த காரணங்களால் சியாங்கின் உள்ளம் ஒருவித சமாதான நீரோட்டத்தில் ஓடுகிறது.