பக்கம்:சீனத்தின் குரல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சீனத்தின் குரல்


மாக" என்று திருமதி சன்யாட்சன் ஆசி கூறியாய் விட்டது.

பல நூற்றாண்டுகள் அன்னியர் படையெடுப்பு. அயல் நாட்டாராதிக்கம், வியாபாரக் கொள்ளை, வட்டிக்கு வட்டி, ஒரு ஆங்கில உயிருக்கு ஈடாக 5 துறைமுகங்கள் நஷ்ட ஈடு, நான்கிங்கில் ஜப்பான் கொடி, ஷாங்காயில் கொமிங்டாங் கொடி, சுங்சிங்கில் கம்யூனிஸ்டு கொடி, காண்டன் துறைமுகத்தில் வெள்ளையர் கொடி, அப்பப்பா யார் இந்த நாட்டின் அதிகாரிகள், யார் இதன் அரசியல் தலைவர்கள், எது முக்கியமான கட்சி, ஏன் உள்நாட்டுப் போர், எந்த சர்க்காரின் சட்டம் பேசுகிறது என்பதே பல் நூற்றாண்டுகள் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருளடர்ந்திருந்த சீனத்தை ஒளிமயமாக்கியவர் மாசேதுங், ஒன்பது ஆண்டுகள் சியாங்-கே-ஷேக்சிடமும், அவர் தலைமையிலிருந்த கொமிங்டாங் கட்சியிடமும் போரிட்டு பெற்ற வெற்றியின் சின்னமாக விளங்குகிறது புதிய சீனம்.


எதர்க்கப்பால்

சியாங்-கே-ஷேக்கின் ஆதிக்க வெறியின் மருந்துக் கிடங்காயிருந்த ஷாங்கை நீதிமன்றம் தன் துணிகரமான பேனாவால் துரோகிகளுக்கு மரண தண்டனையளித்த பிறகு அந்த கொடியவர்கள் தங்கள் கடைசி நேரத்தில் தூக்கு மேடையில் தங்கள் நிழலைப் பார்த்து, சாகும் போதாகிலும் நீதியிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்ற மனித வர்க்கத்தின்