பக்கம்:சீனத்தின் குரல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

85


மாளாத உணர்ச்சியால் உந்தப்பட்ட பிறகு, தங்களையும் அறியாமல், நாங்கள் மக்களுக்கிழைத்த கொடுமைகள் எங்கள் கல்லறையிலே எங்கள் பக்கத்திலேயே தூங்குமாக என்று வாய்விட்டு கத்திய பிறகு, 'மக்கள் அபிமானி மாசேதுங் வாழ்க' 'மறைந்த மாவீரன் சன்யாட்சன் மாசற்ற மூன்று கொள்கைகள் வாழ்க' என்று தங்கள் கண்ணீரால் தூக்கு மேடையை கழுவிய பிறகு, உடலபிமானத்தால் உலகாபிமானத்தை மறந்து எங்கள் ஊன் எந்த கொமிங்டாங் கட்சியால் வளர்க்கப்பட்டதோ, அந்த கட்சிக்கு எங்கள் உயிர்த்தியாகம் செய்து, மக்களுக்கிருந்த தீராத தொல்லை எங்கள் கடைசி மூச்சோடு கலக்குமாக என்று கண்ணீர் மல்கி பலர் மடிந்த பிறகு, ஷேக்கின் பீரங்கிப் படைகள் வெளி வராமல் தடுத்து நிறுத்திய வீரர்களின் பெயரை அட்டைகளில் எழுதி நாடு நகரங்கள் எல்லாம் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட பிறகு, 'நான் சீனன் ஆனால் மூன்று வெள்ளித் துண்டுகளுக்காக ஒரு சீனனையே கொன்றேன், மரண தண்டனையை எனக்கு நானே அளித்துக் கொள்கிறேன்', நீதி மன்றத்தார் மரணத் தீர்ப்பை பகிரங்கமாகச் சொல்லி என்னை அவமானப்படுத்த வேண்டாம், என்று வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டு கோர்ட்டுக்கு வெளியே ஓடி வந்த பல குற்றவாளிகளைக் கண்டு மக்கள் மனம் இறங்கிய பிறகு, அமெரிக்கர் போராடமாட்டார்கள். பொருள் தருவார்கள். போர்க்குணம் அவர்களிடமில்லை.